சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'யூடியூப்' சேனல் மோசடி : கலெக்டர் அலுவலகம் முற்றுகை

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை : சுயதொழில் தருவதாக சொல்லி, ரூ.5 கோடி அளவுக்கு பெற்று மோசடி செய்த 'யூடியூப்' சேனல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.கோவை, இருகூரை சேர்ந்த இரண்டு பெண்கள் இணைந்து, 'யூடியூப்' சேனல் ஒன்றை துவங்கினர். இந்த சேனல் வாயிலாக, பெண்களுக்கு சுயதொழில் பெற்று தருவதாக விளம்பரப்படுத்தினர். அதற்கு கட்டணமும் செலுத்த

கோவை : சுயதொழில் தருவதாக சொல்லி, ரூ.5 கோடி அளவுக்கு பெற்று மோசடி செய்த 'யூடியூப்' சேனல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோவை, இருகூரை சேர்ந்த இரண்டு பெண்கள் இணைந்து, 'யூடியூப்' சேனல் ஒன்றை துவங்கினர். இந்த சேனல் வாயிலாக, பெண்களுக்கு சுயதொழில் பெற்று தருவதாக விளம்பரப்படுத்தினர். அதற்கு கட்டணமும் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். இதை நம்பி, கோவை, திருப்பூர், நாமக்கல், ராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள், ஆயிரம் முதல், பத்தாயிரம் வரை பணத்தை 'ஆன்லைன்' வாயிலாக, அவர்கள் கொடுத்த மொபைல்போன் எண்ணுக்கு அனுப்பினர்.

ஆனால், பணத்தை கொடுத்து நீண்ட நாட்களாகியும் பெண்களுக்கான சுயதொழில் சம்பந்தமான எந்த ஒரு தகவல்களையும் தெரிவிக்காமல் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இதுவரை மாநிலம் முழுவதும், 5,000த்துக்கு மேற்பட்டோரிடம், 5 கோடி ரூபாய் அளவுக்கு இவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட கோவையை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின், கலெக்டரை சந்தித்து பணத்தை மீட்டு தருமாறு புகார் மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X