அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாய சங்கத்தினரை எதிர்த்து பா.ஜ.,வினர் முற்றுகை

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருச்சி : திருச்சியில், தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கத்தினரை எதிர்த்து, பா.ஜ., கட்சியினர் போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சியில், தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி- கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தலைவர்

திருச்சி : திருச்சியில், தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கத்தினரை எதிர்த்து, பா.ஜ., கட்சியினர் போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சியில், தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி- கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தலைவர் அய்யாக்கண்ணு வீட்டில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள், கடந்த 34 நாட்களாக, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில், விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்துவதாக கூறி, நேற்று, பா.ஜ., கட்சியினர், அய்யாக்கண்ணு வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ., தலைவர் ராஜசேகரன் தலைமையில் போராட்டம் நடத்திய கட்சியினரை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அதனால், அவர்கள் சாலையோரம் அமர்ந்து, அய்யாக்கண்ணுவை கைது செய்ய கோரி கோஷம் எழுப்பினர். போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். இதனால், அங்கு, ஓரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பா.ஜ., கட்சியினர் போராட்டத்தால், ஏற்கனவே, வீட்டின் முன் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த விவசாய சங்கத்தினர், நேற்று, வீட்டின் காம்பவுண்டுக்குள் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X