பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 784 ஆக உயர்வு

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஈரோடு: கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 784 ஆக உயர்ந்துள்ளது.ஈரோடு மாவட்டத்தில், பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. தடுப்பூசி போடும் பணி, கொரோனா தினசரி பரிசோதனை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தாக்கம் குறைந்து வந்தது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்தில் தினசரி பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதேபோல்

ஈரோடு: கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 784 ஆக உயர்ந்துள்ளது.


ஈரோடு மாவட்டத்தில், பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. தடுப்பூசி போடும் பணி, கொரோனா தினசரி பரிசோதனை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தாக்கம் குறைந்து வந்தது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்தில் தினசரி பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதேபோல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும், தினசரி பாதிப்பை விட குறைந்து வருகிறது. நேற்று சுகாதார துறையினர், நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும், 78 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 5,202 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில், 65 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து, 3,726 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை, 692 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும், 784 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலும் முதியவர்கள்தான் உயிரிழந்துள்ளனர். எனவே, முதியவர்கள் இருக்கும் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் அவர்களை வெளியே அழைத்து செல்ல வேண்டாம் என சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X