பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் விழாவில் அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., தி.மு.க., நிர்வாகி பங்கேற்றதால் பரபரப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோபி: கோபி பாரியூர் கோவிலில் நடந்த பாலாலய விழாவில், அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., செங்கோட்டையன், தி.மு.க., நகர செயலாளர் நாகராஜ் ஒரே சமயத்தில் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டத்தில், அ.தி.மு.க.,வின் கோட்டையாக கருதப்படும், கோபி சட்டசபை தொகுதியில், எட்டாவது முறையாக செங்கோட்டையன் எம்.எல்.ஏ., பதவியை தக்க வைத்துள்ளார். அவர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும், தனியார் முதல்,

கோபி: கோபி பாரியூர் கோவிலில் நடந்த பாலாலய விழாவில், அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., செங்கோட்டையன், தி.மு.க., நகர செயலாளர் நாகராஜ் ஒரே சமயத்தில் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


ஈரோடு மாவட்டத்தில், அ.தி.மு.க.,வின் கோட்டையாக கருதப்படும், கோபி சட்டசபை தொகுதியில், எட்டாவது முறையாக செங்கோட்டையன் எம்.எல்.ஏ., பதவியை தக்க வைத்துள்ளார். அவர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும், தனியார் முதல், அரசு நிகழ்ச்சிகள் வரை, அழைப்பின் அடிப்படையில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கோபி, பாரியூர் வகையறா கோவில்களான, ஆதிநாராயண பெருமாள் மற்றும் அங்காளம்மன் கோவில்கள், 18 ஆண்டுகளுக்கு பின், நடப்பாண்டில் திருப்பணி நடந்த கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். அதன்படி இரு கோவில்களிலும், திருப்பணி துவக்க நிகழ்வாக பாலாலயம் விழா நேற்று காலை, 9:30 மணிக்கு நடந்தது. இதனால் அறநிலையத்துறையினர், பாரபட்சமின்றி உள்ளூர் எம்.எல்.ஏ., என்ற முறையில் செங்கோட்டையனுக்கும், ஆளுங்கட்சி என்பதால் கோபி, தி.மு.க., நகர செயலாளர் நாகராஜூக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். அதையேற்று, தி.மு.க., நகர செயலாளர் நாகராஜ் நேற்று காலை, 8:50 மணிக்கு பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவிலுக்கு வந்தார். 8:55 மணிக்கு எம்.எல்.ஏ., செங்கோட்டையன் வந்தார். இருவரும் சந்தித்தபோது, ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக கைகூப்பி வணக்கம் தெரிவித்து கோவிலுக்குள் நுழைந்தனர். யாக சாலை பூஜையின் போது, இருவரும் ஒரே வரிசையில் நின்று பூஜையில் பங்கேற்றனர். பின், பூஜை முடிந்ததும், அர்ச்சகர் தட்டில் இருவரும் தனித்தனியே தலா, 500 ரூபாயை காணிக்கையாக செலுத்தினர். கோவில் விழாவில் ஒரே சமயத்தில், அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., செங்கோட்டையனும், தி.மு.க., நகர செயலாளர் நாகராஜூம் பங்கேற்றது, கட்சியினர் மட்டுமின்றி பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X