பொது செய்தி

தமிழ்நாடு

பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய கோரி ஒப்பந்த பணியாளர்கள் முறையீடு

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஈரோடு: ஆட்சி மாறியதும், பேரூராட்சியில் ஒப்பந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்துவிட்டு, வேறு பணியாளர்களை நியமித்ததை ரத்து செய்து, தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி, ஈரோடு டி.ஆர்.ஓ., முருகேசனிடம் முறையிட்டனர்.பின், அவர்கள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 42 பேரூராட்சிகளிலும் வார்டு எண்ணிக்கைக்கு ஏற்ப, இரண்டு அல்லது மூன்று சமூக பரப்புரையாளர்கள் நியமித்தனர். மாவட்ட

ஈரோடு: ஆட்சி மாறியதும், பேரூராட்சியில் ஒப்பந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்துவிட்டு, வேறு பணியாளர்களை நியமித்ததை ரத்து செய்து, தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி, ஈரோடு டி.ஆர்.ஓ., முருகேசனிடம் முறையிட்டனர்.


பின், அவர்கள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 42 பேரூராட்சிகளிலும் வார்டு எண்ணிக்கைக்கு ஏற்ப, இரண்டு அல்லது மூன்று சமூக பரப்புரையாளர்கள் நியமித்தனர். மாவட்ட அளவில், 105 பேர் நியமிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர் மூலம் பேரூராட்சி சம்பளம் வழங்கியது. கடந்த நான்கைந்து ஆண்டுகளாக பணி செய்த நிலையில் தற்போது ஆட்சி மாறியது. 80 பேரை பணி நீக்கம் செய்துவிட்டனர். அதற்கு பதில், தி.மு.க.,வினர் பரிந்துரைப்படி புதிய நபர்களை நியமித்துள்ளனர். பேரூராட்சிகளில் குப்பை தரம் பிரித்தல், கழிப்பறை சுத்தம், தண்ணீர் வினியோகம், அரசு வழங்கும் புதிய திட்டப்பணிகளை மக்களிடம் சேர்ப்பது போன்ற பணிகளை செய்து வந்தோம். தற்போது, எங்களை பணி நீக்கம் செய்ததால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். எனவே, மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து, எங்களுக்கு மீண்டும் பணியை தொடர வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X