பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு வசதி வாரிய கட்டடங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல்

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஈரோடு: ''ஏற்கனவே கட்டி முடித்து கட்டடங்களில் குடியிருப்போர், குடி புகாமல் உள்ள கட்டடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்,'' என, அமைச்சர் முத்துசாமி கூறினார்.ஈரோடு, திண்டல் சக்தி நகரில் சாலை அமைக்கும் பணி, லட்சுமி நகரில் பூங்கா அமைக்கும் பணியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். பின்

ஈரோடு: ''ஏற்கனவே கட்டி முடித்து கட்டடங்களில் குடியிருப்போர், குடி புகாமல் உள்ள கட்டடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்,'' என, அமைச்சர் முத்துசாமி கூறினார்.


ஈரோடு, திண்டல் சக்தி நகரில் சாலை அமைக்கும் பணி, லட்சுமி நகரில் பூங்கா அமைக்கும் பணியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். பின் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது கட்டப்பட்டு வரும் வீட்டு வசதி வாரிய வீடுகள் தரமாக, விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படுகிறது. வரும் காலங்களில் கட்டப்படும் கட்டடம் எப்படி இருக்க வேண்டும். கட்டடம் கட்டும்போது, அடிக்கடி ஆய்வு செய்து, மிகத்தரமாக கட்ட வேண்டும் என, முதல்வர் கூறியுள்ளார். ஏற்கனவே கட்டி முடித்து கட்டடங்களில் குடியுருப்போர், குடிபுகாமல் உள்ள கட்டடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதுபற்றி என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாக, வீட்டு வசதி வாரியத்துறையினரும், அரசும் பரிசீலனை செய்து வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு முன் கட்டி கொடுக்கப்பட்ட குடியிருப்புகளில், சங்கம் உள்ளதால், அவர்களிடம் ஒற்றுமை ஏற்படுத்த முயல்கிறோம். கட்டி கொடுத்த வீடுகளுக்கு சீரமைப்பு பணி செய்வது, வீட்டு வசதி வாரியத்தின் பணியல்ல என, அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளதால், அதனை செய்து வருகிறோம். சங்கங்கள் ஒன்றிணைந்து செய்ய வேண்டும். அவர்களுக்கு தேவையான சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து, உதவ தயாராக உள்ளோம். இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X