பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக்கடையை இடமாற்றம் செய்ய மக்கள் வலியுறுத்தல்

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஈரோடு: சென்னிமலை யூனியன் எக்கட்டாம்பாளையம் கிராம மக்கள், மக்கள் பாதுகாப்பு குழு சார்பில், ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் வழங்கிய மனுவில் கூறியதாவது: சென்னிமலை யூனியன் எக்கட்டாம்பாளையம் கிராமத்தில், சில்லகாங்காட்டுவலசு பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. நிழற்கூடத்தை குடிமகன்கள், டாஸ்மாக் பாராக பயன்படுத்தி வருகின்றனர்.

ஈரோடு: சென்னிமலை யூனியன் எக்கட்டாம்பாளையம் கிராம மக்கள், மக்கள் பாதுகாப்பு குழு சார்பில், ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் வழங்கிய மனுவில் கூறியதாவது: சென்னிமலை யூனியன் எக்கட்டாம்பாளையம் கிராமத்தில், சில்லகாங்காட்டுவலசு பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. நிழற்கூடத்தை குடிமகன்கள், டாஸ்மாக் பாராக பயன்படுத்தி வருகின்றனர். அங்கேயே குடித்துவிட்டு அசுத்தம் செய்தும், அங்கேயே அரை நிர்வாணத்துடன் படுத்தும், வாகனங்களை தாறுமாறாக நிறுத்தியும் பிரச்னை செய்கின்றனர். டாஸ்மாக் கடைகளுக்கு சற்று அருகே அய்யம்பாளையத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. வெப்பிலி அரசு துவக்கப்பள்ளிக்கும் டாஸ்மாக் கடை வழியாகவே செல்ல வேண்டி உள்ளது. மது குடிப்பவர்களை கடந்துதான் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், வேலைக்கு செல்லும் பெண்கள் என அனைவரும் செல்ல வேண்டி உள்ளது. கடையால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும், நடவடிக்கை இல்லை. எனவே, கடையை இடம் மாற்றம் செய்யாவிட்டால், மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டி வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X