மக்கள் போராட்டத்தால் பொக்லைன், டிப்பர் லாரி, டிராக்டர்கள் பறிமுதல்

Added : நவ 16, 2021
Advertisement
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே, பஞ்.,க்கு சொந்தமான மண் சாலையை தோண்டி மண் கடத்தலில் ஈடுபட்ட தனியார் மில் நிர்வாகத்துக்கு சொந்தமான பொக்லைன் இயந்திரங்கள், டிப்பர் லாரிகள், டிராக்டர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.புன்செய்புளியம்பட்டி அருகே விண்ணப்பள்ளி பஞ்.,க்கு சொந்தமான மண் சாலை உள்ளது. அப்பகுதி மக்கள் சாலையை பயன்படுத்தி வந்த

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே, பஞ்.,க்கு சொந்தமான மண் சாலையை தோண்டி மண் கடத்தலில் ஈடுபட்ட தனியார் மில் நிர்வாகத்துக்கு சொந்தமான பொக்லைன் இயந்திரங்கள், டிப்பர் லாரிகள், டிராக்டர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புன்செய்புளியம்பட்டி அருகே விண்ணப்பள்ளி பஞ்.,க்கு சொந்தமான மண் சாலை உள்ளது. அப்பகுதி மக்கள் சாலையை பயன்படுத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி, 500 அடி தூரத்துக்கு, 30 அடி அகலத்துக்கு மண் எடுக்கப்பட்டிருந்தது. இதனால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆவேசமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்தி தாசில்தார் ரவிசங்கர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மண் கடத்திய தனியார் மில் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மண் கடத்திய வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று பொக்லைன் இயந்திரங்கள், இரு டிப்பர் லாரிகள், இரு டிராக்டர்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X