சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணத்துக்காக பாட்டியை கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஈரோடு: பணத்துக்காக பாட்டியை கொன்ற பேரனுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.ஈரோடு அருகே ஆர்.என். புதூர் அம்மன் நகரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் பாபு என்ற கோபிநாத், 37. பாண்டியனின் தாய் கவுரி, 70, பெருமாள் மலை, விளையாட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வந்தார். கடந்த, 2011ல் கோபிநாத் தன் நண்பர், பள்ளிபாளையத்தை சேர்ந்த விஜயனுடன் பாட்டி கவுரி வீட்டுக்கு சென்று பணம்

ஈரோடு: பணத்துக்காக பாட்டியை கொன்ற பேரனுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


ஈரோடு அருகே ஆர்.என். புதூர் அம்மன் நகரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் பாபு என்ற கோபிநாத், 37. பாண்டியனின் தாய் கவுரி, 70, பெருமாள் மலை, விளையாட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வந்தார். கடந்த, 2011ல் கோபிநாத் தன் நண்பர், பள்ளிபாளையத்தை சேர்ந்த விஜயனுடன் பாட்டி கவுரி வீட்டுக்கு சென்று பணம் கேட்டுள்ளார். கவுரி பணம் தர மறுத்துள்ளார். இதனால் பாட்டியை, கோபிநாத் பெருமாள் மலை பகுதிக்கு அழைத்து சென்று, கொன்று விட்டு அவர் அணிந்திருந்த எட்டரை பவுன் நகையை கொள்ளையடித்தார். சித்தோடு போலீசார் கோபிநாத், அவரது நண்பர் விஜயனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார். அதில், கவுரியின் பேரன் கோபிநாத்துக்கு நகையை திருடியதற்காக, 10 ஆண்டு தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்தார். பாட்டியை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை, 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். வழக்கிலிருந்து விஜயன் விடுவிக்கப்பட்டார். அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X