தொழிலாளர்கள் போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர்கள் போராட்டம்

Added : நவ 16, 2021
Share
சேலம்: சேலம் கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள், நேற்று, நாட்டாண்மை கழக கட்டடம் முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். டிஸ்ரிக்ட் பஞ்சாலை தொழிலாளர் சங்க செயலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். மூடிய நூற்பாலையை திறக்கவும், தொழிலாளர்களுக்கு உரிய பணப்பலன் வழங்க வேண்டி, கோஷமிட்டனர். அதன்பின், கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனு விபரம்: சட்ட விரோதமாக மூடிய சேலம் நூற்பாலையை உடனடியாக

சேலம்: சேலம் கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள், நேற்று, நாட்டாண்மை கழக கட்டடம் முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். டிஸ்ரிக்ட் பஞ்சாலை தொழிலாளர் சங்க செயலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். மூடிய நூற்பாலையை திறக்கவும், தொழிலாளர்களுக்கு உரிய பணப்பலன் வழங்க வேண்டி, கோஷமிட்டனர். அதன்பின், கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனு விபரம்: சட்ட விரோதமாக மூடிய சேலம் நூற்பாலையை உடனடியாக திறக்க வேண்டும். நூற்பாலை சொத்துக்களை, வாடகை, லீசுக்கு விடக்கூடாது. நூற்பாளர்கள் அனைவரும், விருப்ப ஓய்வில் சென்றுவிட்டதாக பொய்யான தகவல் கூறி, ஆலை மூடுவதற்கு காரணமான அதிகாரிகளை கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும், உரிய பணப்பலன்கள் வழங்க வேண்டும், ஆலை தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X