பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீரை அகற்றகோரி மறியல்

Added : நவ 16, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் அருகே வீராணம் தாதம்பட்டியில் நாகர்படையாட்சி காடு, அண்ணா நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, அந்த பகுதிகளில் மழை நீர் மற்றும் சாக்கடை நீர் இரண்டும், வீடுகளை சூழ்ந்துள்ளது. மாநகராட்சி சார்பில் மழைநீரை வெளியேற்றுவதற்காக வைத்திருந்த மோட்டார் வேலை செய்யவில்லை.

சேலம்: சேலம் அருகே வீராணம் தாதம்பட்டியில் நாகர்படையாட்சி காடு, அண்ணா நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, அந்த பகுதிகளில் மழை நீர் மற்றும் சாக்கடை நீர் இரண்டும், வீடுகளை சூழ்ந்துள்ளது. மாநகராட்சி சார்பில் மழைநீரை வெளியேற்றுவதற்காக வைத்திருந்த மோட்டார் வேலை செய்யவில்லை. இதையொட்டி மழைநீரும் வடியாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு மாநகராட்சி சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி நேற்று தாதம்பட்டி மயானம் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். உதவி போலீஸ் கமிஷனர் சரவணகுமரன், மாநகராட்சி உதவி பொறியாளர் ஓபுளி சுந்தர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X