பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் விழா செலவை ரத்து செய்ய வேண்டும்: தி.மு.க., கவுன்சிலர் பேச்சால் சலசலப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஆத்தூர்: முதல்வர் பங்கேற்ற விழாவுக்கு ஒன்றிய பொது நிதியில் இருந்து செலவு செய்த தீர்மானத்தை ரத்து செய்யும்படி, ஆத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.ஆத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டம், நேற்று, அ.தி.மு.க., சேர்மன் லிங்கம்மாள் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:அ.தி.மு.க., கவுன்சிலர்

ஆத்தூர்: முதல்வர் பங்கேற்ற விழாவுக்கு ஒன்றிய பொது நிதியில் இருந்து செலவு செய்த தீர்மானத்தை ரத்து செய்யும்படி, ஆத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.


ஆத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டம், நேற்று, அ.தி.மு.க., சேர்மன் லிங்கம்மாள் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:


அ.தி.மு.க., கவுன்சிலர் ரவிச்சந்திரன்: ஈச்சம்பட்டியில், ஐந்து தொகுப்பு வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்து, குடியிருக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


பி.டி.ஓ., (கி.ஊ.,) செந்தில்: தொகுப்பு வீடு சேதமடைந்தால், 50 ஆயிரம் ரூபாய் மராமத்து பணிகளுக்கு நிதி வழங்கப்படும். அதிகளவில் பாதிப்பு என்றால் புதிதாக வீடு கட்டித்தரப்படும்.


தி.மு.க., கவுன்சிலர் கயல்விழி: ஆத்தூர் ஒன்றிய பகுதிகளில், மழையால் மக்காச்சோளம், மரவள்ளி பயிர்கள் சேதமடைந்துள்ளன. தண்ணீர் நிற்பதால் கிழங்கு அழுகி வருகிறது. பயிர் சேதம் முழுமையாக ஆய்வு செய்து, அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


பி.டி.ஓ., அசோகன்: வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள், மழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதம் ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அரசு மூலம் உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க., கவுன்சிலர் அய்யாக்கண்ணு: 18, 19வது தீர்மானங்களில், வட்டார போக்குவரத்து அலுவலகம் திறப்பு விழா பணிகளுக்கு, 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறை அல்லாத வேறு துறைக்கு, ஒன்றிய பொது நிதியில் செலவு செய்துள்ளதால், இந்த தீர்மானத்தை ரத்து செய்திட வேண்டும்.


பி.டி.ஓ., அசோகன்: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவுக்கு, ஊராட்சி பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு, சேலம் மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுடன் தான் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது; தீர்மானத்தை நிராகரிப்பதாக நீங்கள் எழுதி கொடுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது. முதல்வர் விழா செலவு குறித்து, கவுன்சிலர் எழுப்பிய கேள்வியால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X