பொது செய்தி

தமிழ்நாடு

ஆணையாம்பட்டி தடுப்பணை சேதம்: மணல் மூட்டைகளை அடுக்கிய விவசாயிகள்

Added : நவ 16, 2021
Share
Advertisement
கெங்கவல்லி: ஆணையாம்பட்டி தடுப்பணையின் ஒரு பகுதி சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருவதாக கூறி, ஐந்து கிராம விவசாயிகள், மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, ஆணையாம்பட்டி வழியாக செல்லும் சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தடுப்பணைகள் வழியாக ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதில், ஆணையாம்பட்டியில் உள்ள தடுப்பணை சேதமடைந்து தண்ணீர் வீணாகி

கெங்கவல்லி: ஆணையாம்பட்டி தடுப்பணையின் ஒரு பகுதி சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருவதாக கூறி, ஐந்து கிராம விவசாயிகள், மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.


சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, ஆணையாம்பட்டி வழியாக செல்லும் சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தடுப்பணைகள் வழியாக ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதில், ஆணையாம்பட்டியில் உள்ள தடுப்பணை சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருவதாக, பெரிய மற்றும் சின்ன புனல்வாசல், நாவலூர், இலுப்பநத்தம், புளியங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட பாசன விவசாயிகள், நேற்று, தடுப்பணை பகுதியில் 400 மூட்டை மணல் அடுக்கி வைத்து, ஏரிக்கு தண்ணீர் செல்லும் வழிப்பாதை ஏற்படுத்தினர்.

இதுகுறித்து, புளியங்குறிச்சி ஊராட்சி தலைவர் பெருமாள் கூறியதாவது: கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், ஆணையாம்பட்டியில் உள்ள தடுப்பணையின் ஒருபகுதி சேதமடைந்தது. பலமுறை புகார் தெரிவித்தும் சீரமைக்கப்படவில்லை. தற்போது பெய்த மழையின்போது, சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆணையாம்பட்டி தடுப்பணையில் இருந்து தண்ணீர் அதிகளவில் வீணாகி வருகிறது. இந்த தடுப்பணை மூலம் புனல்வாசல், நாவலூர், இலுப்பநத்தம், புளியங்குறிச்சி உள்ளிட்ட ஐந்து ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. விவசாயிகள் ஒன்று சேர்ந்து, மணல் மூட்டைகள் அடுக்கிய பின், சின்ன புனல்வாசல், பெரிய புனல்வாசல் ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. தடுப்ணையை சீரமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கெங்கவல்லி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலகுமாரன் கூறியதாவது: ஆணையாம்பட்டி சுவேத நதி குறுக்கே உள்ள தடுப்பணை உடைப்பு எதுவும் ஏற்படவில்லை. பாதுகாப்பான நிலையில் தான் உள்ளது. இந்த தடுப் பணையில் இருந்து, சின்னபுனல்வாசல், பெரிய புனல்வாசல், நாவலூர், இலுப்பநத்தம், புளியங்குறிச்சி ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. மற்றொரு வழிப்பாதையில், வீரகனூர், திட்டச்சேரி உள்ளிட்ட தடுப்பணைகளுக்கு தண்ணீர் செல்கிறது. நல்ல நிலையில் உள்ள தடுப்பணையை சேதமடைந்ததாக கூறி, மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, ஏரிகளுக்கு விரைவாக தண்ணீர் செல்வதற்காக பொய்யான தகவல் கூறி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X