பொது செய்தி

தமிழ்நாடு

வத்தல்மலைக்கு மினிபஸ் இயக்கக்கோரி தீர்மானம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரியில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க தர்மபுரி ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றிய தலைவர் ராஜகோபால் தலைமையில் நடந்தது. சங்க செயலாளர் பிரதாபன் முன்னிலை வகித்தார். இதில், தர்மபுரி மாவட்டம், வத்தல்மலைக்கு மினிபஸ் இயக்க வேண்டும். வத்தல்மலை மலைப்பாதையில், தொடர்ந்து பெய்துவரும் மழையால், சரிந்து விழும் சாலையை, முறையாக சீரமைக்க வேண்டும். சரிவு ஏற்பட்ட

தர்மபுரி: தர்மபுரியில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க தர்மபுரி ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றிய தலைவர் ராஜகோபால் தலைமையில் நடந்தது. சங்க செயலாளர் பிரதாபன் முன்னிலை வகித்தார். இதில், தர்மபுரி மாவட்டம், வத்தல்மலைக்கு மினிபஸ் இயக்க வேண்டும். வத்தல்மலை மலைப்பாதையில், தொடர்ந்து பெய்துவரும் மழையால், சரிந்து விழும் சாலையை, முறையாக சீரமைக்க வேண்டும். சரிவு ஏற்பட்ட இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். மழையால் விவசாய பணிகள் நடக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க குடும்பத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இவர்களுக்கு ரெயின்கோர்ட், கம்பளி, கடப்பாறை, மண்வெட்டி, அரிவாள், பான்டல், கொடுவாள் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X