திருவனந்தபுரம்: நமது நாட்டையும், ஹிந்துக்களையும் மோசமாக சித்தரித்த கார்ட்டூனை கேரள லலித் அகாடமி கவுரப்படுத்தியிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கேரள லலித் கலா அகாடமி சார்பில் 2019 - 2020ம் ஆண்டுக்கான கார்ட்டூன் போட்டியில் கேரளாவின் பொன்னுருண்ணி பகுதியை சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் அனூப் ராதாகிருஷ்ணனின் கார்ட்டூன் கவுரவிக்கப்பட்டுள்ளது. அந்த கார்ட்டூனில் உலகளாவிய மருத்துவ உச்சி மாநாடு ஒன்றில் இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாட்டு பிரதிநிதிகளுடன் இந்தியா சார்பில் காவி போர்வை போர்த்திய பசு அமர்ந்திருப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது. இது நமது நாட்டையும், ஹிந்துக்களின் உணர்வுகளையும் புண்படுத்துவதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கோவிட் பாதிப்புகளை பெருமளவு கட்டுப்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, தற்போது வரை கிட்டத்தட்ட 113 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில், உலக நாடுகளுக்கு மத்தியில் தன் சொந்த நாட்டையே கேவலமாக சித்தரித்தது மட்டுமல்லாமல், அதனை கவுரவித்த கேரள லலித் கலா அகாடமியின் செயலுக்கு அம்மாநில பா.ஜ., சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறுப்பான பதவிகளில் இருக்கும் சிலர் சொந்த நாட்டிற்கு அவமானத்தை கொண்டு வருவதாக கேரள பா.ஜ., தலைவர் கே.சுரேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE