உலகின் பணக்கார நாடானது சீனா; அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (38)
Advertisement
பீஜிங்: உலகின் பணக்கார நாடாக அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்தது. அந்நாட்டின் பொருளாதார நிகர மதிப்பு 120 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.உலக பொருளாதாரத்தின் நிகர மதிப்புகள் குறித்து ஸ்விட்சர்லாந்தில் உள்ள மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிட்யூட் நடத்திய ஆய்வில் உலகின் பணக்கார நாடாக அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளதாக
China, World, Richest Nation, Ahead US, சீனா, உலகம், பணக்கார நாடு, முதலிடம், அமெரிக்கா

பீஜிங்: உலகின் பணக்கார நாடாக அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்தது. அந்நாட்டின் பொருளாதார நிகர மதிப்பு 120 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

உலக பொருளாதாரத்தின் நிகர மதிப்புகள் குறித்து ஸ்விட்சர்லாந்தில் உள்ள மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிட்யூட் நடத்திய ஆய்வில் உலகின் பணக்கார நாடாக அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக உலகின் 60 சதவீத வருமானத்தை வைத்திருக்கும் நாடுகளின் இருப்பு நிலை குறித்து 2000 முதல் 2020ம் ஆண்டு வரையிலான தரவுகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: 2000ம் ஆண்டில் 156 டிரில்லியன் டாலராக இருந்த உலகின் மொத்த பொருளாதார நிகர மதிப்பு 2020ம் ஆண்டில் 514 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில், 3ல் ஒரு பங்கினை சீனா பெற்றுள்ளது.


latest tamil news


2000ம் ஆண்டில் சீனாவின் பொருளாதார நிகர மதிப்பு 7 டிரில்லியன் டாலராக இருந்துள்ளது. இது தற்போது 120 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதன்மூலம் உலகின் பணக்கார நாடாக அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியது. அமெரிக்கா சுமார் 50 டிரில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 2வது இடத்தில் உள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனாவின் மொத்த செல்வத்தில், 3ல் இரு பங்கினை 10 சதவீத பணக்கார குடும்பங்கள் வைத்துள்ளது.


latest tamil news


பணக்கார நாடுகள் பட்டியலில், ஜெர்மனி 3வது இடத்திலும், பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மெக்சிகோ, ஸ்வீடன் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. உலகளவில் 68 சதவீத சொத்துக்கள் ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்து இருக்கிறது. அதேபோல், உள்கட்டமைப்பு சார்ந்த சொத்துக்களின் மதிப்பு 11 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-நவ-202105:03:19 IST Report Abuse
J.V. Iyer கடன், கடன் அப்படீன்னாங்கோ சீனாவுக்கு? எல்லாம் பொய்யா?
Rate this:
Cancel
morlot - Paris,பிரான்ஸ்
17-நவ-202101:32:08 IST Report Abuse
morlot First of china is not a democratic country. There is only one party communist party. Secondly there is no in china and no religion in china. Finally every body is following rules and régulations. No cheating no bribe at all. In case if there is any fault in the tem ,the punishment is very sévère. The whole country is very clean. Where as india is a democratic country. So bribes corruption,no sévère punishment or politicians interférence to save the rowdies. Even,the si called prime minister,président governors are travelling in BMW or Mercedes instead of using indian made cars.who is using indian made cell phone.only poor middle class. So it is very difficult to become number one.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
16-நவ-202121:24:59 IST Report Abuse
Rajagopal சீனாவில் இன்று பெரிய கம்பெனிகள் கடனுக்கு வட்டி கொடுக்க முடியாமல் திவாலாகும் நிலையில் இருக்கின்றன. நிலக்கரி பற்றாக்குறையால் பல இடங்களில் மின்சாரம் இல்லை (திமுக ஆட்சி போல). பல இடங்களில் தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி விட்டன. அரசாங்கம் மக்களை முடிந்த வரைக்கும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேகரித்துக்கொள்ள சொல்லியிருக்கிறது. சூப்பர் ஸ்பீட் ரயில்களால் பெரும் நஷ்டம். எக்கச்சக்கமாக இந்த மாதிரி ரயிலைகளை தொடங்கி இப்போது வருமானம் இல்லாமல் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஏழு கோடி வீடுகள் காலியாக இருக்கின்றன. இதன் நடுவில் சீனா போருக்கு தயார் செய்துகொண்டிருக்கிறது. இந்தியாவைத் தாக்குமா, இல்லை தைவானையா என்பதுதான் கேள்வி. எல்லாம் செழித்து அங்கே பொற்காலம் நடக்கவில்லை எனபதுதான் உண்மை.
Rate this:
mohan - chennai,இந்தியா
17-நவ-202122:27:20 IST Report Abuse
mohanஉண்மை.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X