தேர்தலை முன்னிட்டு அவசரமாக பணிகளை நிறைவு செய்யும் மோடி அரசு - அகிலேஷ் குற்றச்சாட்டு

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சுல்தான்பூர்: ‛‛உ.பி.,யில் தேர்தலை முன்னிட்டு அவசரமாக எக்ஸ்பிரஸ் ரயில்வே தள பணிகளை நிறைவு செய்கிறது மோடி அரசு,'' என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேசிய கட்சிகள் தங்கள் அரசியல் பலத்தை நிரூபிக்க உத்தரபிரதேச மாநில தேர்தலை ஒரு முக்கிய களமாகக்
உபி தேர்தல், அவசரமாக பணிகள், நிறைவு, மோடி அரசு,  அகிலேஷ்யாதவ் குற்றச்சாட்டு

சுல்தான்பூர்: ‛‛உ.பி.,யில் தேர்தலை முன்னிட்டு அவசரமாக எக்ஸ்பிரஸ் ரயில்வே தள பணிகளை நிறைவு செய்கிறது மோடி அரசு,'' என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேசிய கட்சிகள் தங்கள் அரசியல் பலத்தை நிரூபிக்க உத்தரபிரதேச மாநில தேர்தலை ஒரு முக்கிய களமாகக் கருதுகின்றன.


latest tamil news


இதில், வெற்றிபெற காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட தேசிய கட்சிகளும், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட மாநில கட்சிகளும் தற்போது தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

கடந்த முறை பா.ஜ., உத்தரபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து யோகி ஆதித்யநாத் அரசு 5 ஆண்டுகாலம் ஆட்சியை தற்போது நிறைவு செய்துள்ளது. இம்முறை பா.ஜ., தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதே சமயத்தில் சமாஜ்வாடி கட்சி பா.ஜ.,வுக்கு பெரும் போட்டியாக விளங்குகிறது.

இதன் தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்தல் பிரச்சாரத்தின்போது பா.ஜ.,வுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். காசிப்பூர் மற்றும் உபி., தலைநகர் லக்னோ ஆகிய நகரங்களை சுல்தான்பூர் வழியாக இணைக்கும் 340 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் தண்டவாள தடம் உருவாக்கும் பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதை விரைவில் பிரதமர் மோடி திறந்து வைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

இதுகுறித்து தற்போது குற்றம்சாட்டிய அகிலேஷ் யாதவ், அடுத்த ஆண்டு தேர்தல் வரவிருப்பதால் மிக முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாள கட்டமைப்புப் பணியை மத்திய பா.ஜ., அரசு அரைகுறையாக விரைவில் முடிக்க முயற்சி மேற்கொள்கிறது. முழுக்க, முழுக்க அரசியல் நோக்கத்துக்காக மக்கள் பயன்படுத்தும் இந்த வழித்தடத்தில் பா.ஜ., அரசு அவசரம் காட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Thoothukudi,இந்தியா
17-நவ-202107:26:10 IST Report Abuse
Raja செய்யலைன்னா வாக்குறுதியை நிறைவேத்தலைன்னு ஊளையிடுவ. செஞ்சாலும் குத்தம் சொல்ற. நீ எதுக்கு இந்த உலகத்துல இருக்க
Rate this:
Cancel
16-நவ-202120:40:24 IST Report Abuse
பேசும் தமிழன் நீங்கள் என்ன சொல்ல வாறிங்க.... பணிகளை முடிக்க கூடாது என்று சொல்கிறீர்கலா???
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
16-நவ-202120:29:24 IST Report Abuse
Easwar Kamal குறை சொல்லுவதை விட்டுவிட்டு வலுவான கூட்டணி அமைக்க பாருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X