மாற்றுத்திறனாளி தர்ணா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி தர்ணா

Added : நவ 16, 2021
Share
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலவாடியை சேர்ந்தவர் சுரேஷ், 35. இவரது மனைவி முத்துலட்சுமி, 28; இருவரும் மாற்றுத்திறனாளிகள். நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், அரசு வேலை கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத் திறனாளி அலுவலர் செண்பகவள்ளி, அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்தார். அப்?போது, சுரேஷ் ஏற்கனவே பசுமை வீடும், கணவன், மனைவி இருவரும் மின்மோட்டாருடன் தையல்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலவாடியை சேர்ந்தவர் சுரேஷ், 35. இவரது மனைவி முத்துலட்சுமி, 28; இருவரும் மாற்றுத்திறனாளிகள். நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், அரசு வேலை கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத் திறனாளி அலுவலர் செண்பகவள்ளி, அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்தார். அப்?போது, சுரேஷ் ஏற்கனவே பசுமை வீடும், கணவன், மனைவி இருவரும் மின்மோட்டாருடன் தையல் இயந்திரம் வாங்கியது மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற்று வருவது தெரிந்தது. மேலும், கடந்த, 2018ல், 10 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் பெற்ற, 50 ஆயிரம் ரூபாய் கடனை சுரேஷ் இதுவரை திருப்பி செலுத்தாததும் தெரியவந்தது. அவர்களை தர்மபுரி டவுன் ஸ்டேஷக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X