மா.திறனாளிகளுக்கு வீல்சேர் வசதி இல்லை

Added : நவ 16, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கும். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் மனு கொடுப்பது வழக்கம். இதில் வயதானவர்களும், மாற்றுத்திறனாளிகளும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்க வருகின்றனர். ஆனால் அவர்களை அழைத்து செல்லும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் வீல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கும். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் மனு கொடுப்பது வழக்கம். இதில் வயதானவர்களும், மாற்றுத்திறனாளிகளும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்க வருகின்றனர். ஆனால் அவர்களை அழைத்து செல்லும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் வீல் சேர்கள் இல்லை. அவர்கள் கடும் சிரமத்துடனும் தவழ்ந்தும், கைகளாலும் நடந்து வந்தும் மனு அளிக்கின்றனர். நேற்றும் சைக்கிள் ரிக்சா வண்டியில் வந்த மாற்றுத்திறனாளி, வயதானவர்கள் உட்பட பலர் சிரமப்பட்டு மனு அளித்தனர். கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடக்க முடியாமல் வரும் முதியவர்களுக்கு உதவ, வீல்சேர்கள் அமைத்து, கொடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X