பொது செய்தி

தமிழ்நாடு

டெங்குவுக்கு மாணவன் பலி: வீடு வீடாக மருத்துவக்குழு பரிசோதனை

Added : நவ 16, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: வள்ளுவர்புரத்தில், டெங்கு பாதிப்பில் பள்ளி மாணவன் பலியானதால், அப்பகுதியில் மருத்துவ குழுவினர் வீடு வீடாகச்சென்று பரிசோதனை மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பெலவர்த்தி பஞ்.,க்கு உட்பட்ட வள்ளுவர்புரத்தில் பள்ளி மாணவன் டெங்குவுக்கு பலியானார். இதையடுத்து நேற்று பர்கூர் வட்டார மருத்துவர் சிவக்குமார் தலைமையில் மருத்துவர்கள் சங்கீதபிரியா, சூர்யா,

கிருஷ்ணகிரி: வள்ளுவர்புரத்தில், டெங்கு பாதிப்பில் பள்ளி மாணவன் பலியானதால், அப்பகுதியில் மருத்துவ குழுவினர் வீடு வீடாகச்சென்று பரிசோதனை மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பெலவர்த்தி பஞ்.,க்கு உட்பட்ட வள்ளுவர்புரத்தில் பள்ளி மாணவன் டெங்குவுக்கு பலியானார். இதையடுத்து நேற்று பர்கூர் வட்டார மருத்துவர் சிவக்குமார் தலைமையில் மருத்துவர்கள் சங்கீதபிரியா, சூர்யா, கார்த்திக், சுகாதார ஆய்வாளர்கள் தனசேகர், சதீஷ் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் நடமாடும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் உதவியுடன் வள்ளுவர்புரத்தில் உள்ள வீடுகள்தோறும் சென்று, அங்கு உள்ளவர்களிடம் பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் அங்கு, தண்ணீர் தேங்கி உள்ளதா என ஆய்வு செய்தனர். அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோரை பரிசோதித்த மருத்துவக் குழுவினர் அதில், எட்டு பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஓசூருக்கு அனுப்பினர். மேலும் காய்ச்சல், உடல் சோர்வு அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ள அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X