பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு; நகராட்சி கமிஷனருக்கு 'டோஸ்'

Added : நவ 16, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், நகராட்சி கமிஷனரை பணிகளை விரைந்து முடிக்க எச்சரித்தார்.கிருஷ்ணகிரியில் தற்போது பெய்து வரும் மழையால் நிரம்பிய, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள சின்னஏரியில் இருந்து கசியும் நீர், பக்கவாட்டிலுள்ள நரசிம்மசுவாமி கோவில் அருகே தேங்கியிருந்தது. அதை சாக்கடை கால்வாய் வழியாக வெளியேற்றும்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், நகராட்சி கமிஷனரை பணிகளை விரைந்து முடிக்க எச்சரித்தார்.


கிருஷ்ணகிரியில் தற்போது பெய்து வரும் மழையால் நிரம்பிய, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள சின்னஏரியில் இருந்து கசியும் நீர், பக்கவாட்டிலுள்ள நரசிம்மசுவாமி கோவில் அருகே தேங்கியிருந்தது. அதை சாக்கடை கால்வாய் வழியாக வெளியேற்றும் பணியை, கலெக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டி திடீர் ஆய்வு செய்தார். அப்போது கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் முருகேசன், தாசில்தார் சரவணன், நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். அப்போது கலெக்டர் வரும் நேரத்தில் நகராட்சி பணியாளர்கள் அவசர அவசரமாக ஏரியை சுற்றியிருந்த குப்பைகளை கையுறை அணியாமல் அள்ளினர். சின்னஏரியை பார்வையிட்ட கலெக்டர், ''ஏரியை ஏன் சுத்தப் படுத்தவில்லை, தூர்வார டெண்டர் விடப்பட்டு உள்ளது. இந்நிலையில் மழைக்காலங்களில் கூட தூர்வாராமலும், குப்பைகளை அள்ளாமலும் உள்ளீர்கள்,'' என்றார். அதற்கு நகராட்சி கமிஷனர் முருகேசன், ''இப்பகுதிகளில் சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. அதை அகற்றிய பின் பணிகளை துவங்கி விடலாம்,'' என கூறியதற்கு, ''ஆக்கிரமிப்பு பிரச்னைகளை நான் சரிசெய்து கொள்கிறேன். முதலில் ஏரியை சுத்தப்படுத்துவது, குப்பைகளை அள்ளுவது பணியை பாருங்கள், இன்னும், 10 நாட்களில் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்,'' என எச்சரித்தார். அதிகாரிகள் மத்தியில், நகராட்சி கமிஷனரை, கலெக்டர் எச்சரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X