பொது செய்தி

தமிழ்நாடு

யானைகளால் நெற்பயிர்கள் நாசம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, நெற்பயிர்களை யானைகள் நாசம் செய்து சென்றன. கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து, தமிழக எல்லையான ஜவளகிரி வனச்சரகத்துக்கு, கடந்த மாதம், 70க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்தன. இவை, தற்போது மூன்று குழுக்களாக உள்ள நிலையில், 10 யானைகள் மட்டும் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட நொகனூர் காப்புக்காட்டிற்கு இடம் பெயர்ந்தன.

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, நெற்பயிர்களை யானைகள் நாசம் செய்து சென்றன. கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து, தமிழக எல்லையான ஜவளகிரி வனச்சரகத்துக்கு, கடந்த மாதம், 70க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்தன. இவை, தற்போது மூன்று குழுக்களாக உள்ள நிலையில், 10 யானைகள் மட்டும் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட நொகனூர் காப்புக்காட்டிற்கு இடம் பெயர்ந்தன. இதில் மூன்று யானைகள் தனியாக பிரிந்து, நேற்று முன்தினம் இரவு, எஸ்.குருபட்டி கிராமம் அருகே முகாமிட்டன. அங்கிருந்த ஆனந்த்பாபு என்ற விவசாயிகளுக்கு சொந்தமான நெல் வயலை நாசம் செய்து விட்டு, வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன. தகவலின்படி தேன்கனிக்கோட்டை வனத்துறையினர், சேதமான பயிர்களை பார்வையிட்டு, உரிய இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்தனர். கர்நாடகா மாநில இடப்பெயர்வு யானைகளால், பயிர்கள் சேதமாக துவங்கி விட்டதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X