பொது செய்தி

தமிழ்நாடு

தஞ்சாவூரில் ரூ.1.1 கோடியில் உணவு அருங்காட்சியகம் துவக்கம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்: இந்திய உணவுக் கழகம் சார்பில், 1.1 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட உணவு அருங்காட்சியகத்தை, நேற்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார். தஞ்சாவூரில் துவங்கப்பட்ட முதல் இந்திய உணவு கழகம் அதன் பின், நாடு முழுதும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது, தஞ்சாவூரில் நிர்மலா நகரில் உள்ள மண்டல அலுவலகத்தில், 1,860 சதுர அடி பரப்பளவில்,

தஞ்சாவூர்: இந்திய உணவுக் கழகம் சார்பில், 1.1 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட உணவு அருங்காட்சியகத்தை, நேற்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார். தஞ்சாவூரில் துவங்கப்பட்ட முதல் இந்திய உணவு கழகம் அதன் பின், நாடு முழுதும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது, தஞ்சாவூரில் நிர்மலா நகரில் உள்ள மண்டல அலுவலகத்தில், 1,860 சதுர அடி பரப்பளவில், பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் உதவியோடு, அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்தார். நம் நாட்டில் மட்டுமின்றி எகிப்து, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்ட உழவு கலப்பைகள், தானியங்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட களஞ்சியங்கள், உணவை தாக்கும் பூச்சி வகைகள் காட்சி படுத்தப்பட்டிருந்தன. விவசாய நிலத்தில் நெல்லை உற்பத்தி செய்வது முதல், இந்திய உணவு கழகத்தின் வாயிலாக பொது மக்களுக்கு அரிசியாக வினியோகம் செய்வது போன்றவற்றை, மெழுகு பொம்மை, மர பொருட்கள் கொண்டு சென்னையை சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருந்தார்.


எம்.பி., கோபம்: கலெக்டர் உள்ளிட்ட யாருக்கும் அழைப்பு இல்லாமல், இந்திய உணவு கழக அதிகாரிகள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது, தஞ்சாவூர் எம்.பி., பழனிமாணிக்கம் அங்கு வந்தார். நிகழ்ச்சி முடிந்தவுடன், எம்.பி.,யை இந்திய உணவு கழக அதிகாரிகள் வரவேற்றனர். அப்போது, தனக்கு அழைப்பு விடுக்காதது பற்றி கேட்டு, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பின், கோபமாக கிளம்பிய எம்.பி.,யுடன் வாசல் வரை சென்ற அதிகாரிகள், அவரை சமாதான படுத்தினர். இந்திய உணவு கழக அதிகாரிகள் கூறும்போது, 'கொரோனா காரணமாக, யாரையும் அழைக்கவில்லை. உணவுக் கழக அலுவலர்கள் மட்டுமே நிகழச்சியில் கலந்து கொண்டனர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X