பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழையால் தேங்காய் வரத்து குறைவு

Added : நவ 16, 2021
Share
Advertisement
காரிமங்கலம்: தொடர் மழையால், காரிமங்கலம் சந்தையில் தேங்காய் வரத்து குறைந்தது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை தேங்காய் சந்தை நடப்பது வழக்கம். இதில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், இரண்டு லட்சம் தேங்காய்க்கு மேல் விற்பனைக்கு கொண்டு வருவர். இங்கு ஈரோடு, காங்கேயம் உள்ளிட்ட வெளி மாவட்ட வியாபாரிகள் வந்து

காரிமங்கலம்: தொடர் மழையால், காரிமங்கலம் சந்தையில் தேங்காய் வரத்து குறைந்தது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை தேங்காய் சந்தை நடப்பது வழக்கம். இதில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், இரண்டு லட்சம் தேங்காய்க்கு மேல் விற்பனைக்கு கொண்டு வருவர். இங்கு ஈரோடு, காங்கேயம் உள்ளிட்ட வெளி மாவட்ட வியாபாரிகள் வந்து மொத்தமாக தேங்காய் வாங்கி செல்வர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழைக்கு, சந்தைக்கு தேங்காய் வரத்து குறைந்தது. மேலும், வெளி மாவட்ட வியாபாரிகள் வருகையும் குறைந்ததால், நேற்று நடந்த தேங்காய் சந்தையில், 60 ஆயிரம் தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, ஒரு தேங்காய், 8 முதல், 15 ரூபாய் வரை விற்பனையானதில் மொத்தம், ஒரு லட்சம் ரூபாய்க்கு தேங்காய் விற்பனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X