பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு; 45 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று வினாடிக்கு, 45 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உள்ளதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரமடைந்ததால், கர்நாடகாவிலுள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டி, அங்கிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 1,500 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 7,000 கன அடி என மொத்தம், 8,500

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று வினாடிக்கு, 45 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உள்ளதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரமடைந்ததால், கர்நாடகாவிலுள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டி, அங்கிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 1,500 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 7,000 கன அடி என மொத்தம், 8,500 கன அடி உபரிநீர் காவிரியில் திறக்கப்படுகிறது. இந்நிலையில், ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதியை ஒட்டிய பிலிகுண்டுலு, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, கேரிட்டி, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 31 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. ஏற்கனவே குளிக்க தடை மற்றும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மீது தண்ணீர் பாய்ந்தோடுவதால், நடைபாதை பூட்டப்பட்டுள்ளது. பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X