பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.12 கோடி மதிப்புள்ள கோவில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
சென்னிமலை: வெள்ளோட்டில், 80 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த, 12 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.43 ஏக்கர் கோவில் நிலம் மீட்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், வெள்ளோட்டில் உள்ளது ஆதி நாராயண பெருமாள் கோவில். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான, 2.43 ஏக்கர் நிலம், 80 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இந்நிலையில் ஹிந்து சமய

சென்னிமலை: வெள்ளோட்டில், 80 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த, 12 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.43 ஏக்கர் கோவில் நிலம் மீட்கப்பட்டது.


ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், வெள்ளோட்டில் உள்ளது ஆதி நாராயண பெருமாள் கோவில். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான, 2.43 ஏக்கர் நிலம், 80 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இந்நிலையில் ஹிந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஆணையாளர் குமரகுருபரன் ஆகியோர், ஆதி நாராயண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். நேற்று காலை, 9:30 மணிக்கு ஈரோடு மண்டல இணை ஆணையர் மங்கையர்கரசி அறிவுறுத்தலின்படி, ஈரோடு ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி தலைமையில் வருவாய் துறையினர், பொதுமக்கள் முன்னிலையில், இரண்டு பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மாலை, 6:00 மணி வரை ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள், கடைகள் இடித்து அகற்றினர். சென்னிமலை யூனியன் சேர்மன் காயத்ரி இளங்கோ, சென்னிமலை வடக்கு ஒன்றிய, தி.மு.க., செயலாளர் செங்கோட்டையன், குமாரவலசு ஊராட்சி தலைவர் இளங்கோ, வடமுகம் வெள்ளோடு ஊராட்சி தலைவர் வாசுகி ஜெகநாதன், கோவில் செயல் அலுவலர்கள் அருள்குமார் (ஈரோடு), ரமணி காந்தன் (சென்னிமலை) மற்றும் அறநிலையத்துறை பணியாளர்கள் உடனிருந்தனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில், ரோவர் கருவி மூலம் அளவீடு செய்யப்பட்டு, கோவிலுக்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. 80 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த, ஆதி நாராயண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 12 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.43 ஏக்கர் நிலத்தை மீட்டதற்காக, தமிழக அரசுக்கு இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X