பொது செய்தி

தமிழ்நாடு

நம்பியூர் மண்டல துணை தாசில்தார், வி.ஏ.ஓ., லஞ்ச வழக்கில் 'சஸ்பெண்ட்'

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோபி: லஞ்ச புகாரில் சிக்கிய, நம்பியூர் மண்டல துணை தாசில்தார் அழகேசன் மற்றும் வி.ஏ.ஓ., ராம்ஜியை சஸ்பெண்ட் செய்து, ஈரோடு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே கூடக்கரையை சேர்ந்தவர் ரத்தினசாமி, 50; தனக்கு சொந்தமான, 87 சென்ட் நிலத்துக்கு உண்மை தன்மை மற்றும் தடையின்மை சான்று கேட்டு, நம்பியூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்காக வருவாய்த்துறை

கோபி: லஞ்ச புகாரில் சிக்கிய, நம்பியூர் மண்டல துணை தாசில்தார் அழகேசன் மற்றும் வி.ஏ.ஓ., ராம்ஜியை சஸ்பெண்ட் செய்து, ஈரோடு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே கூடக்கரையை சேர்ந்தவர் ரத்தினசாமி, 50; தனக்கு சொந்தமான, 87 சென்ட் நிலத்துக்கு உண்மை தன்மை மற்றும் தடையின்மை சான்று கேட்டு, நம்பியூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்காக வருவாய்த்துறை அதிகாரிகள், 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார். இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய, 20 ஆயிரம் ரூபாய் ரத்தினசாமி மூலம் வழங்கப்பட்டது. அத்தொகையை பெற்ற வழக்கில், எலத்தூர் கிராமம் வி.ஏ.ஓ., ராம்ஜி, மண்டல துணை தாசில்தார் அழகேசன் மற்றும் புரோக்கராக செயல்பட்ட முத்துக்குமார் ஆகியோரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும், மண்டல துணை தாசில்தார் அழகேசன் வசிக்கும் அந்தியூர் வீட்டில் நடத்திய தணிக்கையில், கணக்கில் வராத, 5.39 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த, 13ல், பறிமுதல் செய்தனர். இவர்களில் கைதான அழகேசன், ராம்ஜி ஆகியோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள, கோபி ஆர்.டி.ஓ., பழனிதேவி பரிந்துரை செய்தார். அதன்படி, மண்டல துணை தாசில்தார் அழகேசன், வி.ஏ.ஓ., ராம்ஜி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X