பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு; டாக்டரை கைது செய்ய போலீஸ் தயக்கம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
கரூர்: கரூரில் பள்ளி மாணவிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவமனை மேலாளர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், டாக்டரை கைது செய்ய போலீசார் தயக்கம் காட்டுகின்றனர்.கரூர் பிரதட்சணம் சாலையில் மருத்துவமனை நடத்தி வரும் எலும்பு முறிவு டாக்டர் ரஜினிகாந்த் கடந்த, 13ல் எஸ்.எஸ்.எல்.சி., மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தாய் புகார் செய்தார். இதையடுத்து, ரஜினிகாந்த்,

கரூர்: கரூரில் பள்ளி மாணவிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவமனை மேலாளர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், டாக்டரை கைது செய்ய போலீசார் தயக்கம் காட்டுகின்றனர்.


கரூர் பிரதட்சணம் சாலையில் மருத்துவமனை நடத்தி வரும் எலும்பு முறிவு டாக்டர் ரஜினிகாந்த் கடந்த, 13ல் எஸ்.எஸ்.எல்.சி., மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தாய் புகார் செய்தார். இதையடுத்து, ரஜினிகாந்த், மருத்துவமனை மேலாளர் சரவணன் ஆகியோர் மீது, கரூர் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். அதையறிந்த ரஜினிகாந்த் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, சரவணனை போலீசார் கைது செய்தனர். ஆனால் தலைமறைவாக உள்ள ரஜினிகாந்தை கைது செய்யாமல், போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர். கோவையில் பாலியல் தொந்தரவால், தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி வழக்கில், பள்ளி முதல்வர், ஆசிரியர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால், கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் டாக்டர் ரஜினிகாந்தை கைது செய்யாமல், போலீசார் காலம் கடத்தி வரும் சம்பவம், சமூக நல ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகள், மாணவர் அமைப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகளிர் இன்ஸ்பெக்டர் இல்லை: கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருந்த சுகந்தி, லாலாப்பேட்டைக்கு மாற்றப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. ஆனால், புதிய மகளிர் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படவில்லை. தற்போது மாணவி மீதான பாலியல் வழக்கை கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் விசாரித்து வருகிறார். அவருக்கும் வேறு பணிகள் இருப்பதால் தலைமறைவாக உள்ள டாக்டர் ரஜினிகாந்தை உடனடியாக கைது செய்ய முடியவில்லை என, சக போலீசார் புலம்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X