பொது செய்தி

தமிழ்நாடு

வீணாக செல்லும் ஆத்துப்பாளையம் அணை நீர்: தூர்வாரப்படாததால் 10ஆயிரம் ஏக்கர் பாதிப்பு?

Added : நவ 16, 2021
Share
Advertisement
கரூர்: ஆத்துப்பாளையம் அணையின் வாய்க்கால் தூர் வாரப்படவில்லை என்பதால், 10 ஆயிரம் ஏக்கர் சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.கரூர் மாவட்டம் கார்வழி அருகில் ஆத்துப்பாளையத்தில், 600 ஏக்கரில் அணை உள்ளது. இதில், நொய்யல் ஆற்றின் உபரிநீர் மூலம், 19 ஆயிரத்து, 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. சாயக்கழிவுநீர் பிரச்னையால் திறக்கப்படாமல் இருந்த அணை, 25 ஆண்டுகளுக்கு பின், 2019ல்

கரூர்: ஆத்துப்பாளையம் அணையின் வாய்க்கால் தூர் வாரப்படவில்லை என்பதால், 10 ஆயிரம் ஏக்கர் சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.


கரூர் மாவட்டம் கார்வழி அருகில் ஆத்துப்பாளையத்தில், 600 ஏக்கரில் அணை உள்ளது. இதில், நொய்யல் ஆற்றின் உபரிநீர் மூலம், 19 ஆயிரத்து, 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. சாயக்கழிவுநீர் பிரச்னையால் திறக்கப்படாமல் இருந்த அணை, 25 ஆண்டுகளுக்கு பின், 2019ல் பாசனத்திற்காக திறக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவான, 235.52 மில்லியன் கன அடி நீரை எட்டியது. இதனால், நேற்று அணையில் இருந்த பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. இருந்தபோதும், முழுமையாக தூர் வாரப்படாததால், கடைமடை வரை நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, விவசாய சங்க நிர்வாகிகள் கூறியதாவது: இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், 60 கி.மீட்டர் வாய்க்கால் வாயிலாக, அஞ்சூர், முதல் பஞ்சமாதேவி வரை, 18க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக, தேசிய ஊரக வேலைத்திட்டம் மற்றும் காகிதபுரம் தமிழ்நாடு செய்தி தாள் நிறுவன உதவியுடன் முழுமையாக வாய்க்கால் தூர் வாரப்பட்டுள்ளது. ஆகவே கடைமடை வரை தண்ணீர் சென்றது. மேலும், சாயக்கழிவுநீர் கலந்த தண்ணீர் பாசனத்திற்கு செல்ல கூடாது என்ற நோக்கில், தனி அலுவலர் வாயிலாக, அணை பகுதியில் தினமும் நீரின் உப்பு தன்மை கண்காணிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக அணையில் நீர் வரத்து அதிகம் இருந்தும் கூட முன்னேற்பாடுகள் செய்யவில்லை. பெரும்பாலான பகுதிகளில் வாய்க்கால் தூர் வாரப்படவில்லை. இதனால், வாய்க்கால் முழுவதும் செடி, கொடி படர்ந்து முற்றிலும் நீர் செல்ல முடியாத நிலையில் உள்ளது. மேலும், அணையை கண்காணிக்க தனி அலுவலர் நியமனம் செய்ததாக தெரியவில்லை. இதனால், புன்னம் பகுதி வரை கூட பாசனத்திற்கு தண்ணீர் வருவது சந்தேகம். விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கும் வாய்க்காலை தூர் வாராமல், அதிகாரிகள் அலட்சியமாக விட்டு விட்டனர். இந்த ஆண்டு அணையில் தண்ணீர் திறந்து எந்த பயனுமில்லாமல், 10ஆயிரம் ஏக்கர் சாகுபடி பாதிக்கும் அபாயம் உள்ளது. இனியாவது போர்க்கால அடிப்படையில் வாய்க்காலை தூர் வாரவேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். இது குறித்து, கீழ்பவானி வடிநிலக்கோட்ட உதவி பொறியாளர் சதீஸ்வரனிடம் கேட்ட போது, ''தற்போது, 32 கி.மீ., வரை வாய்க்கால் தூர் வாரப்பட்டுள்ளது. அந்த பகுதி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதி தூர் வாரிய பிறகு தண்ணீர் திறக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X