பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதமாக பெய்த பரவலான மழையால், கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதனால் அணை நீர்மட்டம் கடந்த செப்., 22 முதல், 50 அடிக்கு மேல் உள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு, 1,005 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 1,073 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து முதல்போக

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதமாக பெய்த பரவலான மழையால், கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதனால் அணை நீர்மட்டம் கடந்த செப்., 22 முதல், 50 அடிக்கு மேல் உள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு, 1,005 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 1,073 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு இடது மற்றும் வலதுபுற வாய்க்கால் மூலம், 177 கன அடி, சிறிய மதகின் மூலம் தென்பெண்ணை ஆற்றில், 831 கன அடி என மொத்தம், 1,008 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில், நேற்று நீர்மட்டம், 51 அடியாகவும், நீர்இருப்பு, 1.55 டி.எம்.சி.,யாகவும் இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X