சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் டிரைவர் வெட்டி கொலை; சாலையில் சடலம் வீச்சு

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஓசூர்: தளி அருகே, கார் டிரைவரை கொலை செய்த மர்ம கும்பல், சடலத்தை சாலையில் வீசி சென்றது.கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த தேவகானப்பள்ளியை சேர்ந்தவர் மஞ்சுநாத், 33, கார் டிரைவர்; இவர் மனைவி அனிதா, 28; இரு குழந்தைகள் உள்ளனர்; தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அச்சமயத்தில் அனிதா போலீசாருக்கு போன் செய்வார். அப்போது சமாதானம் செய்து வைக்க அடிக்கடி வந்த

ஓசூர்: தளி அருகே, கார் டிரைவரை கொலை செய்த மர்ம கும்பல், சடலத்தை சாலையில் வீசி சென்றது.


கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த தேவகானப்பள்ளியை சேர்ந்தவர் மஞ்சுநாத், 33, கார் டிரைவர்; இவர் மனைவி அனிதா, 28; இரு குழந்தைகள் உள்ளனர்; தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அச்சமயத்தில் அனிதா போலீசாருக்கு போன் செய்வார். அப்போது சமாதானம் செய்து வைக்க அடிக்கடி வந்த போலீஸ்காரருக்கும், அனிதாவிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய மஞ்சுநாத், கடந்தாண்டு ஜூலை, 21ல் தளி போலீஸ் ஸ்டேஷன் முன், லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து, உயர் போலீசாருக்கு உரிய தகவல் தராமல் விசாரணைக்கு சென்றதாக கூறி, சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் சானபோகனப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர், முகத்தில் வெட்டு காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். நேற்று அதிகாலை, தளி போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதில், கொலையானது மஞ்சுநாத் என்பதும், வேறு பகுதியில் கொலை செய்யப்பட்டு, இங்கு சடலத்தை மர்மநபர்கள் வீசி சென்றதும் தெரிந்தது. மஞ்சுநாத் மனைவி அனிதா தலைமறைவாக உள்ளதால், அவருக்கும், கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் அவரை தேடி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, 9:30 மணி வரை, மஞ்சுநாத்தை அவரது உறவினர்கள் பார்த்துள்ளனர். அதன் பின்தான் கொலை நடந்துள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என தளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X