பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் - கரூர் சிறப்பு ரயில் நேற்று முதல் இயக்கம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
நாமக்கல்: கொரோனா பரவல் காரணமாக, சேலம் - கரூர் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது, பாதிப்பு குறைந்துள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக ஒன்றரை ஆண்டுக்கு பின் நேற்று முதல் மீண்டும் இயங்கியது. சேலத்தில் இருந்து, நேற்று காலை, 6:40 மணிக்கு புறப்பட்ட ரயில், 7:37 மணிக்கு, நாமக்கல் வந்தடைந்தது. அதில், குறைந்த அளவே பயணிகள் இருந்தனர். நாமக்கல்லில் இருந்து கரூர் யாரும்

நாமக்கல்: கொரோனா பரவல் காரணமாக, சேலம் - கரூர் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது, பாதிப்பு குறைந்துள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக ஒன்றரை ஆண்டுக்கு பின் நேற்று முதல் மீண்டும் இயங்கியது. சேலத்தில் இருந்து, நேற்று காலை, 6:40 மணிக்கு புறப்பட்ட ரயில், 7:37 மணிக்கு, நாமக்கல் வந்தடைந்தது. அதில், குறைந்த அளவே பயணிகள் இருந்தனர். நாமக்கல்லில் இருந்து கரூர் யாரும் செல்லவில்லை. இந்த டெமு சிறப்பு ரயில், காலை, 8:20 மணிக்கு கரூர் சென்றடையும். மறுமார்க்கத்தில், இந்த சிறப்பு ரயில் (06838), கரூரில் இருந்து, இரவு, 7:55 மணிக்கு புறப்பட்டு, இரவு, 9:35மணிக்கு சேலம் வந்தடையும். சேலம், மல்லூர், ராசிபுரம், களங்காணி, நாமக்கல், மோகனூர், கரூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். வாரத்தில், 6 நாட்கள் மட்டுமே இந்த டெமு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இயங்காது. இது சிறப்பு ரயிலாக இயக்கப்படுவதால், பயணிகள் ரயில் கட்டணத்திற்கு பதில், எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்னறை ஆண்டுக்கு பின், முன்பதிவில்லாத ரயில் இயக்குவதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X