பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணையில் 2வது நாளாக 40,000 கனஅடி உபரி நீர் திறப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அணையில் நேற்று இரண்டாவது நாளாக வினாடிக்கு, 40 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த, 13ல் இரவு, 9:30 மணிக்கு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான, 120 அடியை எட்டியது. இதனால் நேற்று முன்தினம் அதிகாலை, 1:00 மணியளவில் அணையில் இருந்து உபரி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று முன்தினம்

மேட்டூர்: மேட்டூர் அணையில் நேற்று இரண்டாவது நாளாக வினாடிக்கு, 40 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த, 13ல் இரவு, 9:30 மணிக்கு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான, 120 அடியை எட்டியது. இதனால் நேற்று முன்தினம் அதிகாலை, 1:00 மணியளவில் அணையில் இருந்து உபரி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 40 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று மாலை, 4:00 மணிக்கு அணை நீர்மட்டம், 120.10 அடி, நீர் இருப்பு, 93.63 டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 40 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து நேற்று, இரண்டாவது நாளாக வினாடிக்கு, 40 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X