பொது செய்தி

தமிழ்நாடு

102 வயது ஜெயின் மூதாட்டி ஜீவசமாதி

Added : நவ 16, 2021
Share
Advertisement
வந்தவாசி: வந்தவாசி அருகே, 102 வயது ஜெயின் மூதாட்டி ஜீவசமாதி அடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி விஜயலட்சுமி, 102, ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர். இவருக்கு ஆறு மகள்கள் உள்ளனர். பொன்னுசாமி, 50 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார். இதையடுத்து விஜயலட்சுமி, அவரது மகள்கள் வீட்டில் வசித்து வந்தார். வயது முதிர்ந்தாலும்,

வந்தவாசி: வந்தவாசி அருகே, 102 வயது ஜெயின் மூதாட்டி ஜீவசமாதி அடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி விஜயலட்சுமி, 102, ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர். இவருக்கு ஆறு மகள்கள் உள்ளனர். பொன்னுசாமி, 50 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார். இதையடுத்து விஜயலட்சுமி, அவரது மகள்கள் வீட்டில் வசித்து வந்தார். வயது முதிர்ந்தாலும், கண்ணாடி அணியாமல் படிக்கும் திறன் கொண்டவராக இருந்த இவர், ஜீவசமாதி அடைய முடிவெடுத்தார். அதன்படி கடந்த, 11ல், வந்தவாசி அடுத்த பொன்னூர் மலை அடிவாரத்தில் உள்ள, குந்த குந்தர் விசாகாசார்யர் தவ நிலையத்திற்கு சென்று, எவ்வித உணவையும் உட்கொள்ளாமல் தவம் மேற்கொண்ட மூதாட்டி, நேற்று ஜீவசமாதி அடைந்தார். பின்னர், உறவினர்கள் அதே பகுதியில் அமர்ந்த நிலையில் கொப்பரை தேங்காய், தேங்காய் ஓடு, நெய் கொண்டு எரியூட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X