சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏரியில் மூழ்கி ஒருவர் பலி; மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
செய்யாறு: செய்யாறு அருகே, ஏரியில் குளித்தபோது நான்கு பேர் நீரில் மூழ்கினர். இதில், ஒருவர் பலியானார். காணாமல் போன ஒருவரை தேடி வருகின்றனர். இருவர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த கதிர்வேல், எஸ்.பி., அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சதீஷ், 27, பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சதீஷ் மற்றும் இவரது நண்பர்கள்

செய்யாறு: செய்யாறு அருகே, ஏரியில் குளித்தபோது நான்கு பேர் நீரில் மூழ்கினர். இதில், ஒருவர் பலியானார். காணாமல் போன ஒருவரை தேடி வருகின்றனர். இருவர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த கதிர்வேல், எஸ்.பி., அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சதீஷ், 27, பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சதீஷ் மற்றும் இவரது நண்பர்கள் சோழராஜன், 27, ஜெகன், 27, தட்சணாமூர்த்தி, 27, ஆகியோர் நேற்று முன்தினம் மாலை, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மாமண்டூர் ஏரியில் குளித்தனர். அப்போது நான்கு பேரும் ஏரியில் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், சதீஷ், ஜெகன், தட்சணாமூர்த்தி ஆகிய மூன்று பேரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சதீஷ் வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர். நீரில் மூழ்கி காணாமல் போன சோழராஜனை, செய்யாறு தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். தூசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X