பொது செய்தி

தமிழ்நாடு

இருவரை காணவில்லை: உறவினர்கள் முற்றுகை

Added : நவ 16, 2021
Share
Advertisement
வேலூர்: இரண்டு பேரை காணவில்லை என, உறவினர்கள் காட்பாடி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல், இந்திராநகரை சேர்ந்தவர்கள் விஜய், 20, நேசகுமார், 19. நண்பர்களான இவர்கள் கடந்த, 10ல், வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விஜய், நேசகுமாரை கண்டுபிடித்து தரும்படி, உறவினர்கள் நேற்று

வேலூர்: இரண்டு பேரை காணவில்லை என, உறவினர்கள் காட்பாடி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.


வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல், இந்திராநகரை சேர்ந்தவர்கள் விஜய், 20, நேசகுமார், 19. நண்பர்களான இவர்கள் கடந்த, 10ல், வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விஜய், நேசகுமாரை கண்டுபிடித்து தரும்படி, உறவினர்கள் நேற்று மாலை காட்பாடி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு அழுது புலம்பினர். போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இது குறித்து, காட்பாடி போலீசார் கூறியதாவது: விருதம்பட்டை சேர்ந்த பாலா, 25, பரத், 19, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் விஜய், நேசகுமார் கடந்த, 10ல், விருதம்பட்டு மயானத்தில் மது குடித்த போது, ??ாதை பொருள் விற்ற பணத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விஜய், நேசகுமார் ஆகியோரை தாக்கி கல்லை கட்டி பாலாற்றில் வீசி விட்டு சென்றதாக பாலா, பரத், 17 வயது சிறுவன் கூறுகின்றனர். தற்போது பாலாற்றில் வெள்ளம் வருவதால், அவர்களை தேடுவதில் சிக்கல் உள்ளது. உடல்கள் கிடைத்தால்தான் கொலை வழக்காக பதிவு செய்ய முடியும். அதுவரை காணவில்லை என்று தான் வழக்கு உள்ளது. பாலா உள்ளிட்ட மூவரும் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X