இலங்கை தாதா அங்கொட லொக்கா கூட்டாளி இருவருக்கு 5 நாள் போலீஸ் காவல்

Added : நவ 16, 2021
Advertisement
கோவை: இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளிகள் இருவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்த நிலையில், அவர்கள் இருவரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இலங்கையில் நிழல் உலக தாதாவாக இருந்தவர் அங்கொட லொக்கா. கோவை, சேரன்மாநகர் பகுதியில, பிரதீப் சிங் என்ற பெயரில், அவரது காதலி அம்மானி தான்ஜியுடன் 2018 முதல் ரகசியமாக வசித்து வந்தார்.
இலங்கை தாதா அங்கொட லொக்கா கூட்டாளி இருவருக்கு 5 நாள் போலீஸ் காவல்

கோவை: இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளிகள் இருவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்த நிலையில், அவர்கள் இருவரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் நிழல் உலக தாதாவாக இருந்தவர் அங்கொட லொக்கா. கோவை, சேரன்மாநகர் பகுதியில, பிரதீப் சிங் என்ற பெயரில், அவரது காதலி அம்மானி தான்ஜியுடன் 2018 முதல் ரகசியமாக வசித்து வந்தார். திடீர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அங்கொடா லொக்கா, 2020 ஜூலை 4ல் உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில், போலி சான்றிதழ் கொடுத்து அவரது சடலத்தை பெற்று சென்று, மதுரையில் தகனம் செய்தனர். பீளமேடு போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள் விசாரணை நடத்தி, இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி, சடலத்தை எரிக்க உடந்தையாக இருந்த மதுரையைச் சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில், சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அம்மானி தான்ஜி, முகாமில் வைக்கப்பட்டுள்ளார். அங்கொட லொக்கா, இந்தியாவில் தங்க அடைக்கலம் கொடுத்த அவரது கூட்டாளிகளை , கோவை சி.பி.சி.ஐ.டி, போலீசார் தேடி வந்தனர். அவர்கள் பெங்களூருவில் பதுங்கியிருக்கும் தகவல் அறிந்து, டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் தனிப்படையினர் விரைந்து சென்றனர்.

பெங்களூரு, குள்ளப்பா சர்க்கிள் பகுதியில் பதுங்கியிருந்த, இலங்கை, அதுரகிரியாவை சேர்ந்த சனுக்கா தனநாயகா,38, பெங்களூரு, சுப்பையா பாளையத்தை கோபாலகிருஷ்ணன்,46, ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். கைதான இருவரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி நீதிமன்றத்தில் கோரப்பட்டது. இதில், 5 நாள் மட்டும் அனுமதி அளித்து நீதிபதி சஞ்சீவ் பாஸ்கர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X