காடுகளின் களஞ்சியம் பத்மஸ்ரீ துளசி கவுடா

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
அவர் எந்த பள்ளிக்கூடமும் போய் படித்தது இல்லை ஆனால் இன்று அவரைப் படிக்காத சுற்றுச்சுழலியவாதிகளே இல்லை.அவர்தான் கடந்த சில தினங்களுக்கு முன் பத்மஸ்ரீ பட்டம் பெற்று விருதுக்கே பெருமை சேர்த்த துளசி கவுடா என்ற 72 வயது பழங்குடியின மூதாட்டி.பத்ம விருது பெற்றவர்களில் வித்தியாசமாக இருந்தவர் இவர்தான்.பழங்குடியின மக்களுக்கே உண்டான உடையுடன் எளிமையே உருவாகlatest tamil newsஅவர் எந்த பள்ளிக்கூடமும் போய் படித்தது இல்லை ஆனால் இன்று அவரைப் படிக்காத சுற்றுச்சுழலியவாதிகளே இல்லை.


அவர்தான் கடந்த சில தினங்களுக்கு முன் பத்மஸ்ரீ பட்டம் பெற்று விருதுக்கே பெருமை சேர்த்த துளசி கவுடா என்ற 72 வயது பழங்குடியின மூதாட்டி.


பத்ம விருது பெற்றவர்களில் வித்தியாசமாக இருந்தவர் இவர்தான்.


latest tamil newsபழங்குடியின மக்களுக்கே உண்டான உடையுடன் எளிமையே உருவாக வெறும் காலுடன் அவர் பாதுகாவலர் காட்டிய வழியில் நடந்து செல்கிறார், போகும் வழியில் பிரதமர் உள்துறை அமைச்சர் ஆகியோரை பார்க்கிறார் நின்று வணக்கம் சொல்கிறார் பிரதமரும் உள்துறை அமைச்சரும் பதில் வணக்கம் செலுத்துகின்றனர், விருது பெறப்போகும் துளசி கவுடாவின் முகத்தில் இருக்கும் பொலிவை விட, பிரதமர் உள்துறை அமைச்சர் முகங்களில் அதிக பொலிவு, உற்சாகம், காரணம் எப்பேர்ப்பட்ட பெண்ணுக்கு விருது வழங்கவிருக்கிறோம் என்பதால் ஏற்பட்ட மனநிறைவு அது.


latest tamil news


ஜனாதிபதி அருகே வந்ததும் அவர் காலில் விழுந்து வணங்கப் போகிறார் அதெல்லாம் கூடாது என்பது போல அவர் விலகுகிறார் பின்னர் செங்கோல் போன்ற விருதினை வழங்குகிறார் அதை எப்படி பிடிப்பது எப்படி வாங்குவது என்பது தெரியாமல் சில நிமிடம் தடுமாறுகிறார் பாதுகாவலர்கள் உதவுகிறார்கள் அவருக்கு தெரிந்தது எல்லாம் மரங்களும் விதைகளும்தானே


ஆனால் அந்த தடுமாற்றமும் மூதாட்டியின் வெள்ளந்தி தன்மையைத்தான் காட்டியது, வயது ஏற்படுத்திய வரி வரியான முகத்துடன் இந்தியாவின் முகவரியாய் விளங்கும் அந்த மூதாட்டி சின்னதாய் ஒரு சிரிப்பு சிரிக்கிறார் குழந்தையின் சிரிப்பிற்கு இணையான சிறப்பு சிரிப்பு அது.


கர்நாடகா மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் அங்கோலா வட்டம் ஹொன்னாலி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தை சேர்ந்த துளசி கவுடா சிறு வயது முதலே விவசாயக்கூலி தொழிலாளியான அம்மாவுடன்தான் இருப்பார், அவருக்கு நினைவு தெரிந்த நாள்முதலே வயல்தான் வாழ்க்கை.latest tamil newsசிறு வயதில் தந்தையை இழந்தார், படிக்க வேண்டிய வயதில் அதற்கு வாய்ப்பு இல்லாததால் படிப்பை இழந்தார் அந்தக்கால வழக்கப்படி சிறு வயதிலேயே திருமணமாகி உடனே கணவனையும் இழந்தார், இப்படி துளசி கவுடாவின் வாழ்க்கையில் இழப்புகளும் துயரங்களும் கொஞ்சம் அதிகம்தான்.


அப்போதெல்லாம் இவருக்கு ஆறுதலாக இருந்ததெல்லாம் செடிகளும் கொடிகளும் மரங்களும்தான்.அவைகள் துளசி கவுடா மீது தனது ஸ்பரிசங்களை படரவிட்டு ஆறுதல் சொல்லும் தென்றலை தவழவிட்டு அன்பு செலுத்தும் நல்ல வாசனையைத் தந்து மனதை சாந்தப்படுத்தும் மலர்களைத் துாவி ஊக்கப்படுத்தும் அம்மா என்று சொல்லாமல் அவர் மீது சாய்ந்து உற்சாகப்படுத்தும்.


குழந்தை தொழிலாளர் சட்டம் இல்லாத காலத்தில் 12 வயதிலேயே குடும்ப சுமையை பகிர்ந்து கொள்வதற்காக வனத்துறையில் தற்காலிக வேலையில் சேர்ந்தார்,சம்பளத்திற்காக வேலை பார்க்காமல் செடி கொடிகளை வளர்க்க கிடைத்த சந்தோஷத்திற்காக வேலை பார்த்தார், பெற்ற பிள்ளையை வளர்த்தெடுக்க ஒரு தாய் எப்படி பாடுபடுவாரோ அது போல நற்ற செடியை வளர்த்தெடுக்க படாதபாடு படுவார், அந்த செடி கொஞ்சம் சுணங்கினாலும் இவர் தாங்கமாட்டார் டாக்டரை கூப்பிட்டு,‛என் குழந்தைக்கு என்னாச்சு பாருங்க' என்று கெஞ்சுவதைப் போல வாடிய செடி மீண்டும் துளிர்க்க எல்லாரையும் உதவிக்கு அழைத்துவிடுவார்.


செடி கொடி மரங்களின் மீதான இவரது அபார பாசம் காரணமாக இவரை, வனத்துறை நிரந்தர ஊழியராக்கிக் கொண்டது. இதனால் கூடிய வருமானத்தால் மகிழ்ந்தது அந்தப் பகுதியில் உள்ள தரிசு நிலங்கள்தான்.ஆம் தனது செலவிற்கு போக மிஞ்சிய பணத்தை எல்லாம் தரிசு நிலங்களில் விதை விதைத்து அங்கு காடுகளை உருவாக்க முனைந்தார்.இப்படி இவரது முயற்சி காரணமாக அங்கு இப்போது 30 ஆயிரம் மரங்களைக் கொண்ட காடு உருவாகி அந்த கிராமத்தின் சுற்றுச் சூழலையே மாற்றி அமைத்துள்ளது.


வனத்துறையில் ஒய்வு பெற்ற பிறகுதான் ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் களம் கண்டார், செடி கொடி மரங்கள் பற்றிய இவரது அபார ஞானம் எந்த புத்தகத்திற்குள்ளும் இல்லாதது.எங்கே எதை நட வேண்டும் எப்படி நட வேண்டும் என்பதை துல்லியமாக சொல்லும் ஆற்றல் உள்ளவர் செடியைத் தொட்டுப்பார்த்த மாத்திரத்தில் அதன் குணாதிசயங்களை சொல்லிவிடுவார்.இதனால் இவரைத் தேடி வந்த படிக்கும் ஆராய்ச்சியாளர்களும் பேராசிரியர்களும் விவசாய அதிகாரிகளும் அதிகம்.


எந்த ஊரில் பசுமை தேவைப்பட்டதோ அந்த ஊருக்கு துளசி கவுடா தேவைப்பட்டார் அவரும் இதை ஒரு ஆர்வமாக எடுத்துச் செய்தார் குழந்தைகளை இளஞைர்களை மரம் வளர்ப்பதில் ஊக்கப்படுத்தினார் மக்கள் மறந்து போன மரங்களை நம் மண்ணிற்கு ஏற்ற மரங்களை எல்லாம் மீண்டும் விதைத்து முளைத்து எழச் செய்தார்.


விருதிற்காகவோ பெயருக்காகவோ இதைச் செய்யாமல் மரங்களை வளர்ப்பதை தனது மனதிற்கு பிடித்த சந்தோஷமான பணியாக வாழ்நாளெல்லாம் செய்து கொண்டிருக்கம் இவருக்கு இப்போது பத்மஸ்ரீ விருது தேடி வந்துள்ளது.மரங்களின் நாயகியான இந்த பழங்குடியின மூதாட்டியின் பெயரை இங்குள்ள ஒவ்வாரு மரமும் சொல்லிக் கொண்டே இருக்கும் இப்போது கூடுதலாக பத்மஸ்ரீ துளசி கவுடா என்று அடைமொழியோடு சொல்லும்.


-எல்.முருகராஜ்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Bavani - Salem,இந்தியா
18-நவ-202118:42:13 IST Report Abuse
D.Bavani எனது தாழ்மையான பணிவான வணக்கங்கள் சின்னதாய் அம்மாவிற்கு மனிதன் மட்டும் அல்ல மரங்களும் செடிகளும் அவரின் அளவில்லாத அன்புக்கு தலை வணங்கும் . நன்றி வணக்கம்.🙏🙏🙏🙏
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
17-நவ-202106:45:00 IST Report Abuse
NicoleThomson பிரதமரே இந்த பெண்மணி முன்னாலும் கால்மேல்கால் போட்டு அமர்வது தகுமா என்று யோசியுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X