சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்நீண்ட நேர சந்திர கிரகணம்சூரியன் - நிலவு இடையே ஒரே நேர்கோட்டில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. பவுர்ணமி நாளில் ஏற்படும். சூரியனை பூமி முழுவதுமாக மறைத்தால் முழு சந்திர கிரகணம், பாதி மறைத்தால் பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்நிலையில் 1000 ஆண்டுகளில் இல்லாத, நீண்ட பகுதி சந்திர கிரகணம் நவ. 18 - 19ல் நிகழ உள்ளது. இது 6 மணி, 2 நிமிடம் நேரம் (21,693 வினாடி)

அறிவியல் ஆயிரம்

நீண்ட நேர சந்திர கிரகணம்


சூரியன் - நிலவு இடையே ஒரே நேர்கோட்டில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. பவுர்ணமி நாளில் ஏற்படும். சூரியனை பூமி முழுவதுமாக மறைத்தால் முழு சந்திர கிரகணம், பாதி மறைத்தால் பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்நிலையில் 1000 ஆண்டுகளில் இல்லாத, நீண்ட பகுதி சந்திர கிரகணம் நவ. 18 - 19ல் நிகழ உள்ளது. இது 6 மணி, 2 நிமிடம் நேரம் (21,693 வினாடி) நீடிக்கிறது. இதற்கு முன் நீண்ட பகுதி சந்திர கிரகணம் 1440 பிப். 18ல் ஏற்பட்டது. இதற்கு அடுத்து 2669 பிப். 8ல் நடக்க உள்ளது. இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் தெரியும்.


தகவல் சுரங்கம்

தேசிய வலிப்பு தினம்


உலகில் 5 கோடி பேர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நவ. 17ல் தேசிய வலிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. மூளை நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வ தற்கு அந்த செல்களுக்கிடையில் மிகச்சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இது அதிகமாகி ஒரு மின்புயல் போல் கிளம்புகிறது. அது நரம்பு வழியாக உடல் உறுப்புகளுக்கு கடத்தப்படுகிறது. உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு கை, கால் உதற தொடங்குகிறது. இது 'வலிப்பு' எனப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X