முதல்வர் அறிவித்த கூலி உயர்வு கைக்கு எட்டாததால் அதிருப்தி| Dinamalar

முதல்வர் அறிவித்த கூலி உயர்வு கைக்கு எட்டாததால் அதிருப்தி

Added : நவ 16, 2021
Share
வால்பாறை: தமிழகத்தில் பணிபுரியும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச கூலி உயர்வு சட்டத்தின் படி, கடந்த ஆகஸ்ட் மாதம், 25ம் தேதி முதல் 425.40 ரூபாய் வழங்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.இதனிடையே, அரசு அறிவித்துள்ள சம்பளத்துக்கு குறைவாக இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, தற்போது, தினக்கூலியாக, 395 ரூபாய் பெறுகின்றனர்.இந்நிலையில், கூலி உயர்வு தொடர்பான

வால்பாறை: தமிழகத்தில் பணிபுரியும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச கூலி உயர்வு சட்டத்தின் படி, கடந்த ஆகஸ்ட் மாதம், 25ம் தேதி முதல் 425.40 ரூபாய் வழங்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.இதனிடையே, அரசு அறிவித்துள்ள சம்பளத்துக்கு குறைவாக இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, தற்போது, தினக்கூலியாக, 395 ரூபாய் பெறுகின்றனர்.இந்நிலையில், கூலி உயர்வு தொடர்பான அரசின் இறுதி உத்தரவு வெளியிடும் வரை, சம்பளம் தொடர்பான எந்த ஒரு ஒப்பந்தமும் ஏற்படுத்துவதில்லை என, தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:கொட்டும் மழையிலும், அட்டைப்பூச்சியின் கடியிலும், வனவிலங்குகளின் அச்சுறுத்துதலிலும் உயிரை பணயம் வைத்து, தேயிலை பறிக்கும் பணி செய்கிறோம். நீண்ட கால போரட்டத்திற்கு பின், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சக் கூலியாக, 425.40 வழங்கப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.அரசின் அறிவிப்பு, தொழிலாளர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், இறுதி உத்தரவு வெளியிடாததால், சம்பளம் கைக்கு எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உண்மை நிலையை உணர்ந்து, தமிழக முதல்வர் தொழிலாளர்களுக்கு அறிவித்தபடி கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X