மருத்துவ நிறுவனங்கள் அரசிடம் பதிவு செய்யணும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ நிறுவனங்கள் அரசிடம் பதிவு செய்யணும்

Added : நவ 16, 2021
Share
உடுமலை: நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், முறையாக பதிவுச்சான்று பெற்று மருத்துவ நிறுவனங்கள் செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில், மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தவும், அவை பற்றிய முழு விவரங்கள், அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் போன்றவற்றை நிர்ணயிக்க, மருத்துவ நிறுவனங்கள் முறைபடுத்துதல் திருத்தச்சட்டம் உள்ளது.அதன்படி, அனைத்து

உடுமலை: நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், முறையாக பதிவுச்சான்று பெற்று மருத்துவ நிறுவனங்கள் செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில், மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தவும், அவை பற்றிய முழு விவரங்கள், அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் போன்றவற்றை நிர்ணயிக்க, மருத்துவ நிறுவனங்கள் முறைபடுத்துதல் திருத்தச்சட்டம் உள்ளது.அதன்படி, அனைத்து மருத்துவ நிறுவனங்களும், அரசிடம் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.அவ்வகையில், அலோபதி, ஆயுஸ், பல் மருத்துவம், ஆய்வுக்கூடங்கள், நுண்கதிர் பிரிவு உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் பதியப்பட்டு, பதிவுச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.இந்தச் சான்றிதழை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கவும் வேண்டும். ஆனால், உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், பதிவுச்சான்றை புதுப்பிக்காமல் சில மருத்துவ நிறுவனங்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது.பொதுமக்கள் கூறுகையில், 'முறையாக பதிவுச்சான்று பெற்று, மருத்துவ நிறுவனங்கள் செயல்படுவதை, மருத்துவப்பணிகள் துறையினர் உறுதிப்படுத்த வேண்டும்.பதிவு செய்யப்படாத மற்றும் புதுப்பிக்காத மருத்துவ நிறுவனங்கள் குறித்து, விபரங்களை சேகரிக்க வேண்டும். அவை தொடர்ந்து செயல்படுவதைக் கண்டறிந்து தடுக்க வேண்டும்.மேலும் இது சம்பந்தமாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மருத்துவப்பணிகள் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசும் இதை கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X