கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வளர்பிறை பிரதோஷ நிகழ்ச்சி

Added : நவ 16, 2021
Advertisement
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத கடைசி வளர்பிறை பிரதோஷ நிகழ்ச்சியில் வெள்ளி காப்பில் நந்தி எம்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறையாகிய ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத கடைசி வளர்பிறை பிரதோஷ நிகழ்ச்சி
 கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வளர்பிறை பிரதோஷ நிகழ்ச்சி

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத கடைசி வளர்பிறை பிரதோஷ நிகழ்ச்சியில் வெள்ளி காப்பில் நந்தி எம்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது
.அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறையாகிய ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத கடைசி வளர்பிறை பிரதோஷ நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆலயத்தின் நடுவே வீற்றிருக்கும் நந்திக்கு விஷேச மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளி காப்புகள் சார்த்தப்பட்டு, மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது.தொடர்ந்து தீபாராதனைகள் காட்டப்பட்டது. கும்ப ஆரத்தி, கற்பூர ஆரத்தி, நாக ஆரத்தி, கோபுர ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி மற்றும் மஹா தீபாராதனைகள் காட்டப்பட்டது. முன்னதாக ஷோடஷ சம்ஹார நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து தீபாராதனையும் காட்டப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X