ரயில் பாதையால் துண்டான சாலை

Added : நவ 16, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு: அகல ரயில்பாதைக்காக துண்டிக்கப்பட்ட, கிராம இணைப்பு சாலையை மீண்டும் ஏற்படுத்தி, பள்ளி மாணவர்கள் கல்வி தடைபடாமல் இருக்க, எம்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்படுகிறது. பள்ளியில், அரசம்பாளையம் மட்டுமன்றி, இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள சொலவம்பாளையம், குமாரபாளையம்,

கிணத்துக்கடவு: அகல ரயில்பாதைக்காக துண்டிக்கப்பட்ட, கிராம இணைப்பு சாலையை மீண்டும் ஏற்படுத்தி, பள்ளி மாணவர்கள் கல்வி தடைபடாமல் இருக்க, எம்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்படுகிறது. பள்ளியில், அரசம்பாளையம் மட்டுமன்றி, இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள சொலவம்பாளையம், குமாரபாளையம், கொண்டம்பட்டி மற்றும் காரச்சேரி பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.குறிப்பாக, குமாரபாளையம் கிராமத்தில் இருந்து, 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொள்ளாச்சி - கோவை ரயில்பாதையை கடந்து வந்து படிக்கின்றனர்.கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், இப்பாதை அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டபோது, இரு கிராம மக்களின் கருத்துகளை கேட்காமல், குமாரபாளையம் - அரசம்பாளையம் வரையிலான ரோடு, 30 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்டது.அப்போதைய எம்.பி., மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளிடம் விவசாயிகள், மாணவர்களின் பெற்றோர் முறையிட்டும் வழி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக, ரோடு இருந்த இடத்தில் தடுப்புகளுடன் கூடிய மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டது.இதனால், கூடுதலாக, இரண்டு கி.மீ., துாரம் சென்று பள்ளி மாணவர்களும், விவசாயிகளும் திரும்பும் நிலை ஏற்பட்டது.இச்சிரமத்தை போக்க, மழை நீர் செல்லும் பாலத்தின் தடுப்புகளை அகற்றி, பாதுகாப்பாக இப்பாதையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.இதுபற்றி, இரு கிராம ஊராட்சி தலைவர்கள், எம்.பி., சண்முகசுந்தரம் மற்றும் மாவட்ட கலெக்டரை சந்தித்து, மாணவர்களின் கல்வி தடைபடாமல் தொடர வழித்தட தடையை நீக்க வலியுறுத்த வேண்டும். இதுவே, இரு கிராம மக்களின், நீண்ட கால கோரிக்கையாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X