மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வேண்டும்| Dinamalar

மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வேண்டும்

Added : நவ 16, 2021
Share
பொள்ளாச்சி: 'குறுகிய தெருவை அடைத்து புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.பொள்ளாச்சி, கோணப்பர் வீதியை சேர்ந்த பொதுமக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி கோணப்பர் வீதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் தெரு மிக குறுகிய, 16 அடியாக

பொள்ளாச்சி: 'குறுகிய தெருவை அடைத்து புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.பொள்ளாச்சி, கோணப்பர் வீதியை சேர்ந்த பொதுமக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி கோணப்பர் வீதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் தெரு மிக குறுகிய, 16 அடியாக உள்ளது.தற்போது, இந்த தெருமுனையில் புதியதாக மின்மாற்றி அமைக்க, கடந்த, 10 நாட்களுக்கு முன் நள்ளிரவில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே குறுகலாக உள்ள தெருவில், தெருமுனையில் மின்கம்பம் வைத்துள்ளதால் போக்குவரத்துக்கும், கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லவும் மிகுந்த இடையூறாக உள்ளது.அத்தியாவசிய வண்டிகள், ஆம்புலன்ஸ் வந்து செல்ல முடியாது. எனவே, புதியதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை வேறு இடத்துக்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X