ஒரு போன் போதுமே!

Added : நவ 16, 2021
Share
Advertisement
வீணாகும் குடிநீர்உடுமலை அடுத்த, தளி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே, குடிநீர் குழாயில் பல இடங்களில் கசிவு ஏற்பட்டு, தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது. சுத்திகரிப்பு செய்த நீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆர்.சோமசுந்தரம், உடுமலை.நிழற்கூரை கட்டுவாங்களா?பொள்ளாச்சி, அம்பராம்பாளையம் சுங்கம் பஸ் ஸ்டாப்பில் இருந்த நிழற்கூரை, இரண்டு

வீணாகும் குடிநீர்உடுமலை அடுத்த, தளி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே, குடிநீர் குழாயில் பல இடங்களில் கசிவு ஏற்பட்டு, தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது. சுத்திகரிப்பு செய்த நீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆர்.சோமசுந்தரம், உடுமலை.நிழற்கூரை கட்டுவாங்களா?பொள்ளாச்சி, அம்பராம்பாளையம் சுங்கம் பஸ் ஸ்டாப்பில் இருந்த நிழற்கூரை, இரண்டு ஆண்டுகளுக்கு முன், ரோடு விரிவாக்கத்தின் போது இடித்து அகற்றப்பட்டது. அதன் பின், மீண்டும் அமைக்கப்படாததால், பஸ்சுக்கு காத்திருக்கும் மக்கள் மழையில் நனைந்து அவதிக்கு உள்ளாகின்றனர். எஸ்.சதீஷ், சுப்பேகவுண்டன்புதுார்.சாலையோரத்தில் புதர்கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, தேவரடிபாளையம் செல்லும் வழியில், மயானத்திற்கு எதிரே அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடை செல்லும் தார் சாலையின் இரு பக்கமும் புதர் மண்டி காணப்படுகிறது.வி. ஜெயகுமார், தேவரடிபாளையம்.பூங்கா இடத்தில் கழிவுநீர்பி.என்.ஜி., நகர், இந்திராநகர், ஸ்ரீரங்கபுரம் லே-அவுட்டில், நான்கு குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பூங்கா இடத்தில் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.பொதுமக்கள், ஸ்ரீரங்கபுரம் லே-அவுட்.சுகாதாரம் போயேபோச்சு!பொள்ளாச்சி அடுத்துள்ள அம்பராம்பாளையத்தில் இருந்து, குளத்துார் செல்லும் ரோட்டில், தனியார் மருத்துவமனை அருகில், ரோட்டின் இருபக்கமும் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. கழிவுநீரும் தேங்கி துர்நாற்றம் நிலவுகிறது. குப்பை அகற்றி, சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.எஸ்.இன்பசேகர், பொள்ளாச்சி.ரோட்டுல ஒதுங்க முடியல!பொள்ளாச்சி தேவம்பாடி காளிபாளையத்தில் இருந்து, புரவிபாளையம் செல்லும் ரோட்டின் இருபக்கமும் புதர் வளர்ந்து, ரோட்டை ஆக்கிரமித்து வருகிறது. இதனால், வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்படுவதுடன், எதிரில் வாகனம் வரும் போது, ஒதுங்க முடியாத நிலை உள்ளது.எம்.சரவணகுமார், புரவிபாளையம்.கழிவுநீர் தேக்கம்கொமரலிங்கம் கிழக்குப்பகுதியில் ரோட்டின் ஓரத்தில் சாக்கடை கட்டமைப்பு இல்லை. இதனால், அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இங்கு கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்த, பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கு .ஸ்ரீதர், கொமரலிங்கம்.நீரோடை அடைப்புபாலப்பம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ் சாலை ஓரம் உள்ள கழிவு நீரோடை பல இடங்களில் அடைக்கப்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் செல்ல வழியில்லாமல் ரோட்டில் செல்கிறது. இதை சரிசெய்ய, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வே. ராமசாமி, பாலப்பம்பட்டி.சுகாதார சீர்கேடுஉடுமலை அருகே வாளவாடி அரசு துவக்கப்பள்ளி முன், குப்பை நிறைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை அகற்ற, உள்ளாட்சி அமைப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எல். மகேந்திரன், உடுமலை.ரோட்டில் மண் குவியல்உடுமலை - பழநி ரோட்டில் மண் குவிந்து காணப்படுகிறது. காற்றில் மண்ணும், துாசியும் பறந்து வாகன ஓட்டிகளை பதம்பார்க்கிறது. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை சரிசெய்ய, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒ. செல்வம், உடுமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X