சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதிய உணவு சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு மயக்கம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஆம்பூர்:ஆம்பூர் அருகே, மதிய உணவு சாப்பிட்ட 13 குழந்தைகள் மயங்கி விழுந்தனர்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே சோமலாபுரத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 120 குழந்தைகள் படித்து வந்தனர். இன்று மதியம் 12:00 மணிக்கு குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிலையில், மதியம் 3:30 மணிக்கு 13 குழந்தைகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மயக்கம் போட்டு
மதிய உணவு சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு மயக்கம்

ஆம்பூர்:ஆம்பூர் அருகே, மதிய உணவு சாப்பிட்ட 13 குழந்தைகள் மயங்கி விழுந்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே சோமலாபுரத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 120 குழந்தைகள் படித்து வந்தனர். இன்று மதியம் 12:00 மணிக்கு குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிலையில், மதியம் 3:30 மணிக்கு 13 குழந்தைகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மயக்கம் போட்டு விழுந்தனர்.உடனடியாக அவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பயந்து போன மற்ற குழந்தைகளை பெற்றோர் வீடுகளுக்கு அழைத்துச்சென்று விட்டனர். ஆம்பூர் சுகாதாரத்துறையினர் அந்த குழந்தைகள் வீடுகளுக்கு சென்று முதலுதவி அளித்தனர்.

மாவட்ட அங்கன்வாடி திட்ட இயக்குனர் கோமதி அங்கன்வாடி மைய ஆசிரியர் அஞ்சலி, சமையலர் மல்லிகா ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், மதிய உணவில் பல்லி விழுந்து இறந்தது தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X