சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி

Added : நவ 16, 2021
Share
Advertisement
பள்ளிகொண்டா:பள்ளிகொண்டா அருகே, லாரி மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியாகினர்.சென்னை ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 66. அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ஸ் கடை நடத்தி வந்தார். கடந்த 14 ம் தேதி, உறவினர் வீட்டு திருமண நிச்சயதார்த்தத்தில் பங்கேற்க தர்மபுரிக்கு டாடா இண்டிகா காரில் சென்றார். ஆவடியை சேர்ந்த ராஜேந்திரன், 61, என்ற டிரைவர் காரை ஓட்டிச்

பள்ளிகொண்டா:பள்ளிகொண்டா அருகே, லாரி மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியாகினர்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 66. அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ஸ் கடை நடத்தி வந்தார். கடந்த 14 ம் தேதி, உறவினர் வீட்டு திருமண நிச்சயதார்த்தத்தில் பங்கேற்க தர்மபுரிக்கு டாடா இண்டிகா காரில் சென்றார். ஆவடியை சேர்ந்த ராஜேந்திரன், 61, என்ற டிரைவர் காரை ஓட்டிச் சென்றார்.

விழா முடிந்ததும் நேற்று இரவு 8:00 மணிக்கு காரில் சென்னைக்கு புறப்பட்டனர். வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே கோவிந்தபாடிக்கு இரவு 10:00 மணிக்கு வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி நொறுங்கியது.இதில் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த கோவிந்தசாமி, ராஜேந்திரன் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நள்ளிரவு 12:00 மணிக்கு கோவிந்தசாமியும், இன்று அதிகாலை 2:00 மணிக்கு ராஜேந்திரனும் இறந்தனர். பள்ளிகொண்டா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X