கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவை மாவட்டத்தில் 4 நாட்கள் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
கோவை:கோவை, பீளமேடு பகுதியில் கஞ்சா விற்றது தொடர்பாக, மூன்று பேர் மீது கோவை இ.சி., கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2018 முதல் விசாரணை நடந்து வருகிறது. கடந்த 8 ம் தேதி, இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜாமினில் விடுவிக்கப்பட்ட மூவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். மூன்றாவது எதிரி குமரேசன் தரப்பு வக்கீல் பால்பாண்டியன் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் குமரேசனை மீண்டும்

கோவை:கோவை, பீளமேடு பகுதியில் கஞ்சா விற்றது தொடர்பாக, மூன்று பேர் மீது கோவை இ.சி., கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2018 முதல் விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 8 ம் தேதி, இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜாமினில் விடுவிக்கப்பட்ட மூவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். மூன்றாவது எதிரி குமரேசன் தரப்பு வக்கீல் பால்பாண்டியன் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் குமரேசனை மீண்டும் சிறையிலடைக்க நீதிபதி லோகேஸ்வரன் உத்தரவிட்டார்.

இது குறித்து வக்கீல் பால் பாண்டியன் கோவை வக்கீல் சங்கத்தில் முறையிட்டதை தொடர்ந்து, இ.சி., கோர்ட் நீதிபதியை சந்தித்து பேசினர். அப்போது, சங்க நிர்வாகிகளை நீதிபதி அவமதித்தாக கூறி, மாவட்ட நீதிபதியிடம் புகார் அளித்தனர். இந்த சூழ்நிலையில், வக்கீல் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் இன்று மாலை நடந்தது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நீதிபதியின் செயலை கண்டிக்கும் வகையில், இன்று முதல், வரும் 20 வரை, நான்கு நாட்கள், கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களை வக்கீல்கள் புறக்கணிப்பது, நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் புகார் அளிப்பது, நீதிபதியை சஸ்பெண்ட் அல்லது இடமாற்றம் செய்யாவிடில், மீண்டும் நீதிமன்றங்களை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X