சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடத்தல் நாடகமாடிய 5 பேர் கைது

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஆம்பூர்:ஆம்பூர் அருகே, கடத்தல் நாடகமாடிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே மூலகொல்லையை சேர்ந்தவர் அசேன், 65. வெங்காய மொத்த வியாபாரி. திருமணமான இவருக்கு குழந்தை இல்லாததால், அவரது அக்கள் மகனா அமீது, 21, என்பவரை தன் மகனாக வளர்த்து வந்தார். இவரும் வியாபாரத்தை கவனித்து வந்தார்.நேற்று அசேனுக்கு போன் வந்தது. அதில் பேசியவர், உங்கள் வளர்ப்பு
 கடத்தல் நாடகமாடிய 5 பேர் கைது

ஆம்பூர்:ஆம்பூர் அருகே, கடத்தல் நாடகமாடிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே மூலகொல்லையை சேர்ந்தவர் அசேன், 65. வெங்காய மொத்த வியாபாரி. திருமணமான இவருக்கு குழந்தை இல்லாததால், அவரது அக்கள் மகனா அமீது, 21, என்பவரை தன் மகனாக வளர்த்து வந்தார். இவரும் வியாபாரத்தை கவனித்து வந்தார்.

நேற்று அசேனுக்கு போன் வந்தது. அதில் பேசியவர், உங்கள் வளர்ப்பு மகன் அமீதை கடத்தியதாகவும், 20 லட்சம் ரூபாய் கொடுத்தால் அவரை உயிருடன் விட்டு விடுவதாகவும் கூறியுள்ளனர்.இது குறித்து ஆம்பூர் போலீசில் அசேன் புகார் செய்தார். போலீசார் அசேனுக்கு வந்த மொபைல் போனை ஆய்வு செய்ததில், மாதனுாரில் இருந்து வந்தது தெரியவந்தது. மாதனுார் பங்களாமேட்டில் ஒரு வீட்டில் சோதனை நடத்திய போது அமீது உள்ளிட்ட ஐந்து பேர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்து விசாரித்ததில், வளர்ப்புத் தந்தையிடம் 5 லட்சம் பணத்தை வாங்க அமீது கடத்தல் நாடகம் ஆடியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது:
ஆம்பூர் தார்வழி பகுதியில் அமீது வீட்டு மனை வாங்கி, இரண்டு லட்சம் ரூபாய் முன் பணம் செலுத்தியுள்ளார். மீதி 5 லட்சம் ரூபாயை ஒரு வாரத்தில் செலுத்த ஒப்பந்தம் செய்துள்ளார்.

பணத்தை வளர்ப்புத் தந்தையான அசேனிடம் கேட்டதற்கு அவர் தரவில்லை.இதனால் தனது நண்பர்களான ஆம்பூர் ஆயிலா நகரை சேர்ந்த முகமது சித்திக், 23, ஹர்ஹத் அபிப்ரி, 24, பூந்தோட்டம், பயாஸ் அகமது, 21, ஆம்பூர் வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்த, அபிப், 23, ஆகியோருடன் சேர்ந்து தந்தை அசேனை கடத்த முதலில் திட்டமிட்டனர்.
இதற்காக பல முறை வளர்ப்புத் தந்தைக்கு போன் செய்து வெளியே அழைத்த போது அவர் வீட்டை விட்டு வரவில்லை. இதனால், அமீத் தன்னை கடத்தியதாக நாடகமாடி பணத்தை பறிக்க திட்டமிட்டது தெரியவந்தது.

20 லட்சம் ரூபாய் கேட்டால் தான் 5 லட்சம் ரூபாயாவது கிடைக்கும், அதை வீட்டு மனைக்கு கொடுத்து விடலாம் என அமீது திட்டமிட்டுள்ளார்.இந்த வழக்கில் அமீத், முகமது சித்திக், ஹர்ஹத் அபிப்ரி, பயாஸ் அகமது, அபிப், ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டு வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X