பொது செய்தி

தமிழ்நாடு

மா.திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணம் வழங்கல்

Added : நவ 16, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு, உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். 12 குழந்தைகளுக்கு நடை பயிற்சி உபகரணம், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான மருத்துவ உபகரணங்கள், மூன்று சக்கர வண்டி, காது கேட்கும் கருவி, சக்கர நாற்காலி

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு, உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். 12 குழந்தைகளுக்கு நடை பயிற்சி உபகரணம், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான மருத்துவ உபகரணங்கள், மூன்று சக்கர வண்டி, காது கேட்கும் கருவி, சக்கர நாற்காலி உள்ளிட்ட உதவி உபகரணங்களை எம்.பி., ராஜேஷ்குமார் வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், நான்கு பேருக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலி என, 2.10 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். டி.ஆர்.ஓ., துர்காமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் ராமன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தட்சணாமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X